5 - முடிவில்லா இரவு

204 16 19
                                    

                 இன்று 20.01.2010 நள்ளிரவு 12.00 க்கு மேல் நான்சியின் மொபைல் பிஸியாக இருந்தது. அவள் பிறந்தநாள் என்பதால் அவளுக்கு Line கிடைக்கவில்லை. நான் 19.01.2010 அன்று இரவு சுமார் 2 மணி நேரம் அவளிடம் மெசேஜ் செய்து கொண்டு இருந்தேன். நான் என்னை அறிமுகம் செய்து கொண்டு அவளின் பதில் என்னவாக இருக்கும் என்று ஒவ்வரு மெசேஜ்க்கும் காத்து இருந்து பதில் அனுப்பி கொண்டிருந்தேன்.

                முதன் முதல் ஒரு பெண்ணின் பதிலுக்கு காத்து இருந்தது ஒரு புது வித அனுபவத்தை கொடுத்தது. இரவு 12.30 மணிக்கு மேல் அவளின் பதில் கிடைத்தது. நான் மிகவும் தயக்கமுடன் எனது மொபைல் உள்ள SMS பார்த்தேன். அவள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருப்பதாலும், தொடர்ந்து அவள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க call செய்ததாலும் அவளுக்கு மொபைல் சார்ஜ் இல்லாமல் போனதால், அவள் நாளை மெசேஜ் செய்வதாக சொல்லி தூங்க சென்றால் Good night என்று முடிவு செய்து.

                 நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்து சிறிது நேரம் மொபைல் பார்த்து அவளிடம் இருந்து மறுபடியும் SMS வரும் என்ற நம்பிக்கையிலும் ஒரு பெண்ணிடம் பேசிய மகிழ்ச்சியில் உறங்க செல்லாமல் இரவு 1.30 மணி வரை அவ்வபொழுது என் மொபைல் ஒவ்வரு  5 நிமிடம் பார்த்து கொண்டிருந்தேன். அவள் விட்டு சென்ற அந்த சில நிமிடம் என்னை மிகுந்த துயரத்திலும், ஒரு விதமான தனிமையில் ஆழ்த்தியது, அவளிடம் பேசிய பின்பு, அவளின் SMS வர ஏங்கி கொண்டிருந்த அந்த நிமிடம் என்னை பல யுகங்கள் பழகி விட்டு சென்ற பிரிவை தந்தது. 19.01.2010 முதல் என் விட்டில் அனைவரும் இருந்தது போலவும், அவள் என்னிடம் பேசி விலகிய  நாட்கள் என் விட்டில் அனைவரும் இருந்தும் யாரும் இல்லாமல் தனித்து விட பட்டவனாய், ஒரு நிலையற்ற உணர்வு விதைக்க பட்டது.

                 எனக்குள் எழுந்த 1000 கேள்விகளுக்கு ஒரு பதில் சுமார் 1.30 மணி அளவில் கிடைத்தது, நான் துங்க வில்லையா என்று வினவினால், அந்த ஒரு SMS என்னுள் எதோ ஒரு உணர்வை மலர செய்தது (இது காதல் என்று எண்ணி விட வேண்டாம்). அவளின் SMS பார்த்து நான் மிகவும் சந்தோஷத்தில் அன்று இரவு முழுவதும் ஒரு முடிவில்லா இரவாய் அமைந்தது. அவள்  பிறந்தநாளுக்கு Treat குடுக்க அவள் தன் தோழிகளுடன் தங்கி இருக்கும் இடத்திருக்கு பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டல்க்கு என்னையும் அவளை அறிமுகம் செய்த கணேஷையும் அழைத்தால்..

                முதன் முதலில் அவளை சந்திக்கும் ஆசையில் அன்று இரவு நான் பல கனவுகளுடன் உறங்க சென்றேன்..



உள்ளுறும் உணர்வுகள்Donde viven las historias. Descúbrelo ahora