ஜ‌ல்லிக்க‌ட்டடு

142 18 11
                                    

ஒரு இனிய‌ மாலை நேர‌ம்.அந்த‌ வீட்டின் தாத்தா தொலைக் காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டு இருந்தார்.அவ‌ர் பேர‌ன் கீழே அம‌ர்ந்து பாட‌ம் எழுதிக் கொண்டு இருந்தான்.அவ‌ன் அம்மா ச‌மைய‌ல் அறையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்.

ஜ‌ல்லிக்க‌ட்டை மீண்டும் ந‌ட‌த்த‌ வ‌லியுருத்தி மாண‌வ‌ர்க‌ள் போராட்ட‌ம் என்ற‌ செய்தியை பார்த்த‌ தாத்தாவின் முக‌ம் வாடி போன‌து.அதைப் பேர‌ன் க‌வ‌னித்தான்.

"என்ன‌ தாத்தா ஆச்சு",என்றான் பேர‌ன்.

"ஒன்னும் இல்லைபா என‌க்கு என் சிறு வ‌ய‌சு நியாப‌க‌ம் வ‌ந்துருச்சு",என்றார்.

"என்ன‌ தாத்தா அது",என்றான் பேர‌ன்.

"நான் சின்ன‌ வ‌ய‌சுல‌ இருக்கும் போது பொங்க‌ள் அன்னிக்கு குளிசுட்டு புது துணி போட்டுகிட்டு கோவிளுக்கு அம்மா அப்பா பெரிய‌ம்மா பெரிய‌ப்பா தாத்தா பாட்டி நு எல்லோரும் சேர்ந்து போய் பொங்க‌ள் வைப்போம்."

சாய‌ங்கால‌ம் திருவிழா மாத‌ரி பாட்டு கூத்து நு எங்க‌ ஊர் கூத்து க‌லைஞர்க‌ள் வ‌ந்து ஆடிப் பாடி எங்க‌ளை ச‌ந்தோசப்‌ ப‌டுத்துவாங்க‌.

"அப்போ எல்லாம் டிவி இல்லையா தாத்தா.ப‌ட‌ம் எல்லாம் பார்க்க‌ மாட்டீங்க‌ளா",என்றான் பேர‌ன்.

"அத‌ல்லாம் அப்போ இல்லை பா.ப‌ண்டிகை நு வ‌ந்தா சொந்த‌ ப‌ந்த‌ங்க‌ளோட‌ தான் கொண்டாடுவோம்.இப்போ தான் எல்லாம் மாறி போச்சு",என்றார் வ‌ருத்த‌மாக‌.

"அப்ப‌ல்லாம் மாட்டு பொங்க‌ள் எப்ப‌டி இருக்கும் தெரியுமா.எங்க‌ வீட்டுல‌ 4 ப‌சு மாடு 1 காளை மாடு.அதுக‌ளை குளிக்க‌ வ‌ச்சு.கொம்புக்கு எல்லாம் க‌ல‌ர் பூசி அல‌ங்கார‌ம் ப‌ன்னுவோம்.சாமி கும்பிட்டு பொங்க‌ள் ப‌டைப்போம்",என்று கூறி க‌ண் க‌ல‌ங்கினார்.

"காளை மாடு வ‌ள‌த்தினீங்க‌ளா.அது குத்தீருமே",என்றான் சிறுவ‌ன்.

"இல்லை பா அது பொற‌ந்த‌துல‌ இருந்து எங்க‌ வீட்டுல‌ தான் இருந்துச்சு.எங்க‌ அம்மா அதையும் ஒரு புள்ள‌ மாதிரி வ‌ள‌ர்த்தாங்க‌.மாட்டு பொங்க‌ள் அன்னிக்கு ந‌ட‌க்குற‌ ஜ‌ல்லிக்க‌ட்டு போட்டிக்கு அனுப்புவோம்.ரொம்ப‌ க‌ம்பீர‌மான‌ காளை.யாராலும் அதை அட‌க்க‌வே முடியாது."என்றார் பெருமித‌மாக‌.

தமிழ் களஞ்சியம் Where stories live. Discover now