அந்த இரண்டு நாட்கள்

213 26 25
                                    


ஹாய்... அனைவருக்கும் வணக்கம். நான் சைலஜா. வயது 23. "சாமி" படம் த்ரிஷா போல் அழகாக இருப்பேன்..(சரி... சரி...)

"சைலூ..." கூப்பிடுவது என் கணவர். சாமி படம் விக்ரம் போல் ஸ்மார்ட். உண்மையாகவே இந்த ஏரியா சப் இன்ஸ்பெக்டர். மிகவும் நேர்மையானவர். வேலையில் மிகவும் கறார். ஆனால் வீட்டில் என்னைத் தாலாட்டும் என் அன்புக் காதலன். எங்கள் கல்யாணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றது. என் பெற்றோர, அவர் பெற்றோர் கிராமத்தில் இருக்கின்றனர்.

"சைலூாாா......" அச்சோ, அவர் கூப்பிடுகிறார். சரி கதைக்குள் செல்வோமா!

"இதோ... வந்துட்டேங்க.. ஏன் இப்படி கத்துறீங்க" − நான்.

"எவ்ளோ நேரமா கூப்டுட்டு இருக்கேன். என்ன பன்னிட்டு இருந்தே.." − அவர்.

"ம்ம்.. கதை எழுதிட்டு இருந்தேன்... அப்பப்பா வர்றதுக்குள்ளே எவ்வளவு அவசரம்" − நான்.

"சரி சரி. இந்தா என் கிரெடிட் கார்ட். நாளை மறு நாள் உன் பிறந்த நாளுக்கு புடவை எடுக்கனுமில்ல. நான் ஈவ்னிங் வர லேட் ஆகும். நீ போய் உனக்கு பிடிச்சதா பார்த்து எடுத்துக்கோ. சரியா." − அவர்.

"ஓ என் பர்த் டே ஞாபகம் இருக்கா! பரவாயில்லையே!" − நான்.

என் இடுப்பில் கைகோர்த்து என்னை கட்டி அணைத்தார்.

"ம்ம்ம்... அதெப்படி மறக்கும்... என் செல்லம்" என்றார்.

"வெறும் புடவை மட்டும் தானா.." − நான், முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.

என்னை மேலும் இறுக அணைத்து, அவர் குறு குறு மீசை என் காது மடல்களை உரசிக்கொள்ள மெதுவாக, "வேறு என்ன வேணும்... இன்னைக்கு நைட்ல இருந்து உன் பர்த் டே வரைக்கும் டெய்லி நைட் ஸ்பெஷல் ஷோ வச்சுக்கலாமா?" என்று சொக்கும் வார்த்தைகளில் சொன்னார். ஒரு நிமிடம் மெய் மறந்து நின்றேன். என் வீக் பாய்ண்டை நன்றாகத் தெரிந்து கொண்ட கள்வன்.

அவரை தள்ளி விட்டு, "சீய்... போங்க.. மாமி பார்க்கப்போறாங்க."

தமிழ் களஞ்சியம் Donde viven las historias. Descúbrelo ahora