யார் குற்றம் அன்பே

337 39 65
                                    

ஷங்ரீலா ஹோட்டல்,மலேசியா

(Shangri-la hotel)

வானில் கருமை நிறம் படர்ந்து விரிந்திருந்தது. அதனை அழங்கரிப்பது போலவே நட்சத்திரங்கள் கண்சிமிட்டி சிரித்தன.

விடியலை எதிர் நோக்கி கீழ்வானம் காத்திருந்தது.

ஹோட்டல் அறையில் ஆளை உள்ளிருக்கும் மெத்தையில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான் ஆதவ்.

ஆதவன் பிறர் வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் கொண்டுவரவே பிறந்தவன். பெற்றோருக்கு ஒற்றைப் பிள்ளையென பிறந்து, குடும்ப தொழிலான ஹோட்டல் துறையில் கொடிக் கட்டி பறக்கும் 29 வயது நிறம்பிய வாலிபன்.

சென்னை மாநகரில் பிறந்து, இன்று மலேசியாவில் தொலைந்து போன தன் வாழ்வை தேடி அலைகிறான். என்று அவனது தாய் கமலாவதி அவனது திருமண பேச்சை எடுத்தாரோ அன்றே ஆதவின் வாசம் சுவாசம் மலேசிய மண் என்றானது.

கல்லூரி காலத்தில் பல பெண்கள் புடைசூழ கண்ணனாய் திரிந்தவன், இன்று பெண்கள் காதலெனும் பெயரில் அவனை நெருங்கினாலே சுட்டெரிக்கும் சூரியனாய் இருக்கிறான். காரணம் புரியாத பல கேள்விகள் அவன் மனதில்.

காலைச் சூரியன் வழக்கம் போல் தன் அலுவலை ஆரம்பித்தான். மெல்ல சூரிய கதிர்கள் பூமியை அழங்கரித்தது.

ஆதவனிற்கு இன்றாவது தன் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமே என்று மலைப்பாக இருந்தது.

ஆதவ் தன் ஆபிஸ் அறையில் கோப்புகளைப் பார்வையிட்டு கொண்டிருந்தான். மதியம் வெளிநாட்டு பங்குதாறர்களோடு முக்கியமான மீட்டிங் இருந்தது.

அவசர அவசரமாக தன் வேலையை முடித்துக் கொண்டு மீட்டிங் அறைக்கு விரைந்தான். அப்பொழுது திடீரென்று ஒரு பெண் குழந்தை ஆதவனின் காலை இறுக்கமாக கட்டிக் கொண்டது.

சட்டென்று அவனின் நடை நின்றது. தன்னைக் கட்டிக் கொண்ட அழகிய தேவதையை இமைக்காது நோக்கினான்.

யாரிந்த குழந்தை, இப்படி தனியே சுற்றிக் கொண்டிருக்கிறதே, என எண்ணியவன்; குழந்தையின் பெற்றோர் எங்கேனும் தென்படுகின்றனரா என கண்களால் துலாவினான்.

தமிழ் களஞ்சியம் Donde viven las historias. Descúbrelo ahora