புயலின் மறுபக்கம்

108 9 6
                                    

பிரளயம் தன் கோர தாண்டவத்தை அரங்கேற்றிச் சென்றதைப்போல காட்சியளித்துக் கொண்டிருந்தது அந்தப் பெருநகரம்.

மனித நடமாட்டமற்ற அதன் பிரதான வீதிகள் எங்கும் கண்ணாடிச் சிதறல்கள் ,இரத்தக் கறைகள், கரிந்துபோய் எலும்புக்கூடாய் நிற்கும் வாகனங்கள்.

மனிதக் கால்களின் வேகத்தையும் தடுமாற்றத்தையும் முத்திரை பதித்ததுபோல் கவிழ்ந்தும் ஒருக்களித்தும், பல அளவுகளில் புதியதும் பழையதுமான செருப்புகள்.., வீசிய காற்றில் சாம்பல் புழுதி, வீதி நெடுக இருபுறமும் எரிந்து அடங்கிய பின்னும் கடைகளுக்குள் மிச்சமிருந்த கருகிய நெடி போக்குவரத்தற்ற சாலைகளின் பரப்பில் எழும்பிக் கொண்டிருந்த கானல்..,' நகரத்தின் இயக்கத்திற்கும், தொழிலுக்கும் முதுகெலும்பாய் நேற்றுவரை இருந்தது இந்த இடம்தானா..?'

நொடியில் மாறும் திரைப்படக் காட்சிபோல ஒரேநாளில் இந்நகரத்தை தலைகீழாகப் புரட்டிப்போட்டது எது..?

மதக்கலவரத்தின் கோரமுகம் நிதர்சனமாய் முகம் காட்ட,மேனியெங்கும் சிலிர்த்து அடங்கியது தேவகிக்கு..

காலையில் நடந்த கலவரத்தில் உறவுகளைப் பலி கொடுத்த அப்பாவிமக்களில் ஒருத்தியாக,தனது கணவனைப் பறிகொடுத்தவளாக. இப்போது அரசு மருத்துவ மனை வளாகத்தில், கணவனின் உடலைப் பெற்றுக்கொள்ள பிணவறை முன்பு காத்திருக்கிறாள்.

அந்த மருத்துவமனையில்,உயிரற்றுப் போன நகரத்தின் அமைதிக்கு எதிர்மாறாய் சந்தடிகள் நிறைந்திருந்தது. அனால் அதில் உற்சாகக்குரல்களோ, உவகைத் துடிப்புகளோ எதுவுமின்றி திரும்பிய பக்கமெல்லாம் ஒப்பாரியும் கேவல்களுமாய் மனிதர்கள்.

இன்று காலையில் வழக்கம்போல "போய்வருகிறேன்"என்று வேலைக்குப் புறப்பட்டுச் சென்ற கணவன் வழயிலேயே மடக்கப்பட்டு,வெட்டிக் கொல்லப் பட்டதும். கை, கால், கழுத்து என பல இடங்களும் சின்னாபின்னமாய் இருந்த உடலை அடையாளம் காட்ட போலீசார் அழைத்து வந்ததும், யாரோ இயக்கி வைத்தது போலஅடுத்தடுத்து நடந்து முடிந்திருந்தது.

தமிழ் களஞ்சியம் Donde viven las historias. Descúbrelo ahora