அவளுக்கென

186 26 15
                                    

எனக்கு இன்று அவ்வளவு சந்தோஷம்... என் வாழ்வில் இந்த சந்தோஷத்தை மூன்றாவது முறையாக அனுபவிக்கிறேன்... இனிமேல் இந்த சந்தோஷம் எனக்கு கிடைக்கவே கிடைக்காது...

என்னடா இவன் இவ்வளவு அழுத்தமாக சொல்கிறானே என்று பார்க்கிறீர்களா???

என் விதி மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை. நான் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் கொஞ்சம் கொஞ்சமாக என் உயிரை விட்டுக்கொண்டிருந்தேன்.

புரியவில்லையா... மலை உச்சியில் இருந்து குதித்திருந்தேன்.

என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. ஆனால் துக்கத்தில் இல்லை. சந்தோஷத்தில்... 'அதை' சாதித்த மகிழ்ச்சியில்...

அன்று மார்ச் 14, 2012... மாலை 5:30 மணி...

அந்த பூங்காவில் தனிமையில் அமர்ந்திருந்தேன். சூரியன் மேற்கில் மறைந்து, சந்திரன் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருந்தான். அந்த பூங்காவின் ஒரு மரத்தடியில் அமர்ந்து அக்காட்சியை ரசித்துக்கொண்டிருந்தேன்.

மாலையில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த மழலை பட்டாளம்... கையில் பஞ்சுமிட்டாய், பாப்கார்ன் பாக்கெட்டுடன் அங்கங்கே அமர்ந்திருந்த சில காதல் ஜோடிகள்... புரளி பேசிக்கொண்டிருந்த பெண்கள்... அரசியல் பேசிக்கொண்டிருந்த கிழவர்கள்...

மனிதர்களில் தான் எத்தனை விதம்...

அப்பொழுது யாரோ என் முதுகில் கை வைப்பது தெரிந்தது. திரும்பிப்பார்த்தேன். அவள்...

பச்சை நிற சுடிதார்... மாநிறம் தான்... ஒற்றை ஜடை... அதில் ஒற்றை ரோஜா... நெற்றியில் சந்தனத்தால் ஒரு சிறிய கோடு... வட்ட அரக்கு போட்டு... காதில் ஜிமிக்கி அவள் கன்னத்தை தொட்டு விளையாடின... கழுத்தில் ஒரு செயின்... கை நிறைய வளையல் ஒன்றோடொன்று உரசி சத்தம் போட்டன... காலில் கொலுசு இசை பாடியது...

அன்று தான் அந்த முதல் சந்தோஷத்தை உணர்ந்தேன்.

ஒரு நிமிடம் அந்த சூழலை மறந்து என் கண்கள் அவளை ரசிப்பதை உணர்ந்தேன். திடீரென நினைவிற்கு திரும்பியவனாய், "என்னங்க... என்ன வேணும்???", என்றேன்.

தமிழ் களஞ்சியம் Where stories live. Discover now