கடவுள் இருக்கான் குமாரு

192 7 1
                                    

குமார், 32 வயது நிரம்பிய இளைஞன்..வட்டாட்சியர் அலுவலகத்தில் சப் ரெஜிஸ்தார் வேலை, அரசாங்க உத்தியோகம் என்பதால் தலை சற்று நிமிர்ந்தே இருக்கும்..தன்னை பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்ளுவான்..உண்மையில் அவன் நாத்திகவாதி மட்டும் தான்..

அறிவியல் முதல் கடவுள் வரை, எதுவாக இருந்தாலும், அப்படியே நம்பாது பகுத்து அறிந்து தெளிபவர்கள், ஆதாரம் அற்றவைகளை நம்பாதவர்கள், சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை எதிர்ப்பவர்களே பகுத்தறிவுவாதிகள்..மாறாக ‘கடவுள் இல்லை’ என்று சொன்னாலே ‘பகுத்தறிவுவாதி’ என்ற பட்டம் கொடுத்து விடுகிறார்கள் சிலர்..அதிலும் அரசியல்வாதிகளை பற்றி சொல்லவே தேவை இல்லை!!  

குமாரின் மனைவி சுவாதி மற்றும், மகன் தருண், 4 வயது நிரம்பிய குழந்தை..சுவாதியின் குணத்தோடும், குமாரின் தோற்றத்தோடும் இருப்பவன்..

“சுவாதி..டிபன் கொண்டு வா” டைனிங் டேபிளில் அமர்ந்து பூஜை அறையை பார்த்து கத்திக் கொண்டிருந்தான்..சுவாதி, குமாருக்கு நேர் எதிர்..அவளுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்..திருமணமாகி குமாரின் வீட்டிற்கு வந்ததில் இருந்து ஒரு கோவிலுக்கு கூட அழைத்துச் சென்றதே இல்லை என குறை பட்டுக் கொல்லுவாள்..தனியாக செல்லவும் விருப்பம் இருக்காது..அதனால் வீட்டில் பூஜை அறையில் அதிக நேரம் செலவிடுவாள்..அது கூட குமாருக்கு பிடிக்காது..அந்நேரம் பார்த்து அவளுக்கு ஏதேனும் வேலை சொல்லிக் கொண்டே இருப்பான்..

பிளேட்டை கொண்டு வந்து பட்டென்று வைத்து விட்டு, அவனை முறைமுறை என்று முறைத்தாள்..

“என்னடி செல்லம்!!! முறைக்குற?? மாமனுக்கு ஆபீஸ்சுக்கு டைம் ஆச்சா இல்லையா?? அதான் கூப்பிட்டேன்..இதுக்கு போய் பத்ர காளி மாதிரி அவதாரம் எடுக்கற?கிறுக்கு பயபுள்ள..”

“டேய்!!! மூடிட்டு சாப்பிட்டுட்டு போடா..இல்லன்னா இந்த சாப்பாடும் கிடைக்காது..”

இப்படி பல சமயங்களில் மரியாதை தேயும் போது, கண்டுகொள்ளாமல் ஈஈஈ என்று சிரித்து விட்டு வேலையை தொடர்வான்..இன்றும் அதே தான்.. “அரசியலில் இதெல்லாம் சகஜம்..அடிக்கமால் விட்டாளே, அதுவே போதும்” என தனக்கு தானே சொல்லிக் கொண்டு, சாப்பிட்டு முடித்து விட்டு, அலுவலகம் நோக்கி பயணித்தான்..

தமிழ் களஞ்சியம் Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ