காதலால் காயப்பட்டாயோ...
கன்னியால் ஏமாற்ற பட்டாயோ...
கலங்கிநிற்கும் உன்
இதயத்தை - என்னுள்
இடமாற்றவே வந்தேனடா..!
என் அன்பின் ஆழத்தை
உணர்வாயோ - உணராமல்
உதறுவாயோ நானும்
அறியேனடா.!!
என்மேலா அல்லது
காதலின் மேலா - உன்
நம்பிக்கையின்மை...
காத்திருப்பேனடா...!!!
என் அன்பே
காதலின் மீதல்ல - என்மீது
நம்பிக்கை பிறக்கும்வரை❤