கனவு கலைந்துவிடுமோ என
கலங்கி கண்ணை மூடிக்கொண்டாயோ...
மதி கெட்ட மூடர்களின் நடுவில் பிறந்தாயடி என்
பெண்ணே.....
இன்று நாடு கதறும் கதறல் உன் காதில் கேட்குமோ...?
தந்தையின் உழைப்பையும்......
தாயின் ஊட்டலையும் ......
பரிதவிக்க விட்டல்லவா.... சென்றுவிட்டாய்.......
இனி ஒரு விதி செய்வோம் என
அன்றே பாரதி...... கதறினானே.. அமைதி காத்தது அல்லவா... இவ்வூழல் சமூகம்.....!
இன்று அதை நீ இறந்தா..? எடுத்துரைக்க வேண்டும்...!
அப்படியும் இதை ஏற்க மாட்டார்களே....! பணத்திற்கும்.... பகட்டிற்கும் ஏங்கி நிற்கும் எச்சைகளே..... எத்தனை பேரை இழந்தால்..... இசைந்து கொடுப்பீர்...
நீங்கள் வாழ நினைக்கும் வாழ்வு... பணத்தால் அல்ல...... இன்று எம்மக்கள் நினைத்துவிட்டால்..... இன்றே இப்பாரதத்திற்கு ஒரு விதி செய்ய நேரிடும்...!
நினைவில் கொள்......!