கவிஞனாே தாய்மையைப்பற்றி
புகழ - கயவனோ
அங்கத்தை மெச்சுகிறான்...!
காவியில் கருகியும்..!
வெண்மையில் வெதும்பியும்..!
பச்சையோ பசப்பியும் அல்லவா
போயிற்று...!
நீதிக்காக ஓடிய சக்கரமோ..!
நித்தம் ஓய்வில்லாமல்
மடியேந்தி பிச்சைக்கேட்டது
நீதியை..!
பள்ளியறையில்
பருவமறியா வயதில் கூடவா
அவள் - உங்கள்
காமயிச்சையை மெருகேற்றினால்..!
என்ன அவலம் இது...!
கலாச்சாரத்தையையும்.....!
கல்வியையும்...!
இம்மண்ணிண் - பண்பாட்டையும்
கடன்பட்டேனும் கற்கவேண்டுமென...!
உரைத்த மாமனிதர்கள்
பிறந்த மண்ணடா....!
காந்தி உரைத்தார் !!!
ஓர் பெண் நடுநிசியில்
நகையணிந்து நடந்துவர - அவள்
வீட்டினிலோ பயமறந்து ..!
வீடுசேருவாள் பாதுகாப்பாய் - அன்றே...! நாட்டின் சுதந்திரதினம்.!
என்னே ஆச்சரியம்...!
அனைவரும் நாம் வாழ்வது
சுதந்திர.... இந்தியா... என்றல்லவா பிதற்றுகிறார்கள்..!