மனசும் தடுமாறுதடா

10 2 0
                                    

நீ சிரிக்கையில மனசும்
தடுமாறுதடா.... !!!
மயங்கித்தான் நானும் போறேனே...
உன் மங்காத குணத்துல...!.!!
சேத்துவச்ச ஆசையெல்லாம்
சில்லரை போல... சிதறிடவே...!
தேயாத உன் ஞாபகமோ
கண்ண சேக்கத்தான் விடலையே..!!
வாடா மல்லியும்... வாடிபோகுமடா..
உன் வரவுக்காக காத்திருந்த - என்
வாடிய முகத்தைக்கண்டு...!!!
முதல் சிரிப்புல முழுசா தொலைஞ்சேனே.... மனசு முழுசும்
உன்ன விதையா விதைச்சனே....!!!
ஏங்கி நிற்கும் என் மனச....
ஏற்றுத்தான் கொள்வாயோ....!!!
அல்ல.... ஏற்கப்பட முடியா என் அன்பை.... எண்ணிதான் பார்ப்பாயோ.... காதல் மடல் நானும் தூது அனுப்பல... ஆனால்..
துணிச்சல் மட்டும் வந்ததடா நான் காதல் செய்திட... என் அன்பே❤

பலவண்ணங்கள் Where stories live. Discover now