என் சகியே - 2

4.2K 100 49
                                    


என் அன்பு சிநேகிதனுக்கு...

உன்னை முத்தமிட்ட நொடியினிலே

என் மூச்சு நின்று போனதடா

நீ என் மெய்தொட்ட நொடியினிலே

நான் புதிதாய் பிறந்தேனடா

நீ என்னை அணைத்த நொடியினிலே

உயிர் தீண்டும் இன்பம் கொண்டேனடா

ஏழ் பிறப்பும் உன்னோடு வாழ்ந்திட்ட

நிறைவு கொண்டேனடா

இந்த நொடி என் வாழ்வினிலே

என்றும் மறவேனடா

தென்றலைப் போல உங்களின் நினைவுகள் என் நெஞ்சம் வருடிச் செல்கின்றது. திங்களென என் மனதில் உலா வருகின்றீர்கள். உங்களைச் சந்தித்த சந்திப்புகளை மனம் பொக்கிஷமெனப் பாதுகாக்கிறது.

இருப்பினும் உங்களை இப்படியொரு சந்தர்ப்பத்தில் சந்திக்க நேருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆபத்துக்கள் நிறைந்த உலகம் உங்களுக்குப் பழகிப்போயிருக்கலாம். ஆனாலும் கவனமாக இருங்கள் எனக்காகவேனும்...

அப்புறம், இதைச் சொல்வதற்கு எனக்குக் கொஞ்சம் வெட்கமாகத் தான் உள்ளது. ஆனாலும், உங்களை முத்தமிட எனக்கு எப்படி தைரியம் வந்தது? என்று யோசித்தேன். பிறகு தான் தெரிந்தது உங்களை நேசிக்கும் எனக்கு இதற்குக் கூடவா தைரியம் இல்லாமல் போகும் என்று...

இப்படிக்கு

உங்கள் அன்பு சிநேகிதி

கடிதத்தை மீண்டும் படித்து விட்டு மடித்து உறையில் வைத்தாள் பிரியசகி. அத்தோடு, மித்ரன் மேல் விழுந்திருந்த அவளை அவன் அணைத்திருப்பதைப் போல வரைந்திருந்த ஓவியத்தையும் பார்சலில் வைத்து அதை அவன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து முன்பைப் போல வைத்து விட்டு வந்து விட்டாள்.

பிரியசகி இருபத்து மூன்று வயது அழகிய யுவதி. எம்.எஸ்சி கெமிஸ்ட்ரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள்.

என் சகியேNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ