என் முதல் கனவும் நீயே!
என் முதல் காதலும் நீயே!
என் முதல் உறவும் நீயே!
இரவு..
பிரியரஞ்சனின் அறைக்குள் பால் டம்ளருடன் வந்தாள் காயத்ரி. என்னதான் அவனோடு திருமணத்திற்கு முன், மணிக்கணக்காக போனில் பேசியிருந்த போதும் இன்று அவனை எதிர்கொள்ள ஒருவித தயக்கமாகவும், கூச்சமாகவும் இருந்தது அவளுக்கு.
அவள் வந்ததும் கதவைத் தாழிட்டு விட்டு வந்த ரஞ்சன், அவளைக் கைபிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தான். அவள் தயக்கத்தைப் போக்க நினைத்தவன் வேண்டுமென்றே அவளிடம்,
என்னடி நீ இப்படி தத்தி மாதிரி நின்று கொண்டு இருக்கின்றாய்? என்றான்.
உடனே அவனை முறைத்தவள், கோபத்துடன், நான் என்ன தத்தியா? என்று என்று கேட்டாள்.
ஆமாம். உனக்கு மரியாதையே தெரியவில்லையே. அறைக்குள் வந்ததும் அத்தான் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று உன் வீட்டில் சொல்லித்தரவில்லையா உனக்கு? என்றான் நமுட்டுச் சிரிப்புடன்.
என்ன, எனக்கு மரியாதை தெரியவில்லையா? என்றவள், அருகிலிருந்த தலையணையை எடுத்து அவனை அடிக்க ஆரம்பித்தாள்.
லாவகமாக அவளிமிருந்து தலையணையைப் பிடுங்கியவன், அவளைத் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தான். அவள் காதோரமாக முதலிரவு அன்று கணவனை தலையணையால் அடிக்கக் கூடாதுடி. இப்படித் தான் அடிக்க வேண்டும் என்று கூறி, அவள் நெற்றி, கண்கள், கன்னங்கள் இதழ்கள் என்று வரிசையாக முத்தமிட்டான்.
அவள் வெட்கத்துடன் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். பின் கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தன் வசமாக்கி கொண்டான் பிரியரஞ்சன். அந்த இரவு அவர்களுக்கு மறக்க முடியாததாக அமைந்தது.
...........
மித்ரனின் அறைக்குள் செல்லவே தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது பிரியசகிக்கு. இருப்பினும் செல்லாமல் இருக்க முடியாதே. எனவே அறைக்குள் சென்றாள். ஆனால் அங்கே மித்ரன் இல்லை.
YOU ARE READING
என் சகியே
General Fictionஹீரோ - மித்ரன் ஹீரோயின் - பிரியசகி லாஜிக் பார்க்காம ஸ்டோரி படிங்க என்ஜாய் பண்ணுங்க மறக்காம vote & comment pannunga viewers