என் சகியே - 7

2.4K 96 50
                                    


"கானலானக் காதல் மீண்டும்

கல்யாணமாய்க் கைகூடியதென்ன மாயம்?"

எஸ்.ஆர்.எஸ் திருமண மண்டபம் அந்த அதிகாலை வேளையில் மிக அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தது. வழிநெடுகிலும் வாழை மரங்களாலும், தோரணங்களாலும், வண்ண வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

அதிகாலை ஐந்தரை மணிக்கு முகூர்த்தம் என்பதாலும், இரண்டு திருமணங்களும் ஒரே நேரத்தில் என்பதாலும், அனைவரும் நான்கு மணிக்கே எழுந்து ஆளுக்கு ஒன்றாக என்று திருமண வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

இரண்டு திருமணங்கள் என்பதால், இரண்டு மணமேடைகளை அமைத்திருந்தனர். நல்ல அழகான, வாசனையான பூக்கள் கொண்டு மிக நேர்த்தியாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

திருமண நேரம் நெருங்கி விட்டதால், மாப்பிள்ளைகள் இருவரையும் அழைத்தனர். பட்டு வேஷ்டி சட்டையில் மிகவும் அழகாக இருந்தான் மித்ரன். கம்பீரமாக வந்து மணமேடையில் அமர்ந்தான்.

இன்னொரு மேடையில், அதே கம்பீரத்துடன் வந்தமர்ந்தான் பிரியரஞ்சன். அவன் எப்போது மணமகளை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் அவன் பொறுமையைச் சோதித்துவிட்டு பின் மணமகள்களை அழைத்து வரச் சொன்னார்கள். பிரியசகியை தர்ஷனியும், அவள் வயதுடைய மற்ற உறவுப் பெண்களும் சேர்ந்து அழைத்து வந்தனர்.

அரக்குச் சிவப்பு நிறப் பட்டுப்புடவையில், தங்க நிறத்தில் உடல் முழுவதும் கொடிகள் படர்ந்திருக்க, அங்கங்கே அழகிய பூக்கள் பரவியிருக்க, அதற்குப் பொருத்தமான நகைகள் அணிந்து, நடந்து வரும்போது, தேவலோகத்தில் இருந்து இறங்கி வரும் தேவமங்கை போல ஜொலித்தாள் பிரியசகி. மண்டபத்திலுள்ள அனைவரும் அவளைப் பார்க்க, அவளுக்கோ தன் நாயகனைக் காணும் ஆவல் தோன்றியது.

மித்ரனைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும் தோழிகள் கிண்டல் செய்வார்களே என்று தலைகுனிந்தபடியே நடந்து கொண்டிருந்தாள். இருப்பினும் அவனைப் பார்க்கும் ஆவல் அதிகமாக லேசாக தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.

என் சகியேDonde viven las historias. Descúbrelo ahora