என் சகியே - 15

2.6K 89 24
                                    


தனிமை என்னைக் கொல்லுதடி

நீயில்லா என் வாழ்வும் வெறுமையடி

மன வருத்தத்தில் இருந்ததால் காரில் வரும்போது இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. தன் நினைவுகளில் மூழ்கி இருந்த பிரியசகி கார் எங்கே செல்கிறது என்று கவனிக்கவில்லை. கார் நின்றதும் இறங்கிய பின்பு தான் தெரிந்தது, அது அவளின் தாய் வீடு என்பது. இதை எதிர் பார்க்கவில்லை அவள்.

ஏற்கனவே நிறைய நேரமாகி விட்டது. அதோடு மித்ரன் இப்போதிருக்கும் மனநிலையில் இனி வீட்டிற்குத்தான் அழைத்துச் செல்லப் போகிறார் என்று நினைத்திருந்தாள் பிரியசகி. ஆனால் அவளை இங்கே அழைத்து வருவான் என்று நினைக்கவில்லை அவள். எனவே ஆச்சரியத்துடன் அவன் முகம் நோக்கினாள்.

அதற்குள் பொன்செல்வனும் பானுமதியும் வாசலுக்கே வந்து வரவேற்றனர். அவர்களும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களை நன்கு உபசரித்தனர்.

மறுநாள் மித்ரனுக்கு வேலை இருப்பதால் சிறிது நேரத்திலேயே கிளம்புவதாய்க் கூறினான் அவன். எனவே பிரியசகியும் உடன் கிளம்பினாள். அதைப் பார்த்த பொன்செல்வன், இப்போது தான் வந்திருக்கிறீர்கள். வந்து கொஞ்சம் நேரம் தான் ஆகிறது. அதற்குள்ளாக அதுவும் இந்த இரவு நேரத்தில் உடனேயே கிளம்ப வேண்டுமா? என்று கூறித் தடுத்தார். மேலும் குறைந்தது இரு நாள்களாவது இருந்து விட்டுப் போனால் தானே நன்றாக இருக்கும் என்று கூறினார்.

விடுமுறை இல்லாததால் கண்டிப்பாக கிளம்ப வேண்டும் என்று மித்ரன் கூறவே, பிரியாவையாவது விட்டுச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார். மித்ரனுக்கும் அது சரியாகப் பட்டது. ஏற்கனவே பிரியா இங்கே வரத்தானே ஆசைப் பட்டாள். இப்போதிருக்கும் மனநிலையில் இங்கே இருந்தால் அவள் மனம் சிறிது ஆறுதலடையும் என்று தோன்றியது. எனவே பிரியசகியை அவளின் பிறந்த வீட்டிலேயே விட்டுவிட்டு மேலும் சிறிது நேரம் அவர்கள் அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பினான்.

என் சகியேWhere stories live. Discover now