என் சகியே - 14

2.1K 68 9
                                    


நின் வார்த்தைகளற்ற மௌனம் – என்னை

உயிர்வரை சென்று கொல்லுவதேனோ?

நில்லுடா.. என்றார் சுந்தரம்.

கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் நேராய்த் தன் அறைக்குச் செல்வதற்காய் மாடியேறினான் மித்ரன். அப்போது தான் சுந்தரம் அவனை அவ்வாறு கோபமாய் நிற்கச் சொன்னார்.

அவரின் கோபக் குரலைக் கேட்டவனுக்குப் புரிந்து தான் இருந்தது. தான் பிரியாவைக் கோவிலில் வைத்து அடித்ததற்குத் தான் அவர் இவ்வளவு கோபமாய் இருக்கிறாரென்று.

ஆனால் அவரை எவ்வாறு எதிர் கொள்வதென்று புரியவில்லை. எனவே அப்படியே திரும்பி நின்றவன் என்னவென்பதாய் அவரைப் பார்த்தான்.

அனைவரின் மனதிலும் ஒரு யுத்தம் நடக்கப் போவதாய்த் தோன்ற பயத்துடன் நின்றிருந்தனர்.

அவன் அமைதியாய் நிற்பதைப் பார்த்தவருக்கு இன்னும் கோபம் அதிகமானது.

என்னடா நினைக்கிறாய் உன் மனதில் கோவிலில் வைத்து எதற்கு என் மருமகளை அடித்தாய் நீ? கேட்க ஆளில்லை என்று நினைத்தாயா? இதுதான் நீ குடும்பம் நடத்தும் லட்சணமா? என்று கோபமாய்க் கேட்டார்.

என்ன சொல்வதென்று அறியாதவனாய் அமைதியாய் நின்றிருந்தான் மித்ரன். அவன் பதில் கூறாது அப்படியே நிற்பதைக் கண்டவருக்கு இன்னும் அதிகமாய்க் கோபம் வந்தது.

நம் வீட்டிற்கு நம்மை நம்பி வாழ வந்த பெண்ணை நீ இப்படித்தான் கொடுமை செய்வாயா? நானும் உன்னைப் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன். வரவர நீ ஒன்றும் சரி இல்லை.

அப்போது, அவர் என் மேல் இருந்த பாசத்தினால் தான் அப்போதிருந்த பதட்டத்தில் அப்படி செய்து விட்டார் மாமா. பிரச்சனையைப் பெரிதுபடுத்த வேண்டாம் இத்தோடு விட்டு விடலாம் மாமா என்று கெஞ்சலாய்க் கூறினாள் பிரியசகி.

என் சகியேDonde viven las historias. Descúbrelo ahora