என் சகியே - 3

3.2K 84 35
                                    


என் அன்பு சகனுக்கு...

சுற்றி அலையும் உன் பார்வை

என்னைத் தேடுவதாய் எண்ணியே

என் மனம் தான் மகிழுதடா

உன் கனல் பார்வை கண்டு

என் நெஞ்சம் தான்

மிரண்டு போனதடா

முகம் சுழித்து நீயும்

பார்த்த வேளையினிலே

என் மனம் தான் வலித்ததடா

அடுத்த நொடியே மீண்டும் நீ

சிரித்ததினாலே என் மனம்

நிறைந்து போனதடா

என் உயிர் உள்ளவரை உன் சகியென

வாழ்ந்திட வேண்டுமென்று

என்னுயிரும் ஏங்குதடா

நிழலாய் உன் பின்னோடு

என்றும் நான் தொடர்வேனென்று

உள்ளம் தான் உரைக்குதடா

தீக்குள் விரலை வைத்தால் சுடுமெனத் தெரிந்தாலும் அதைச் செய்யவே தோன்றுகிறது. உங்கள் பார்வைக்கு அவ்வளவு சக்தியா? உங்களின் ஒரு சிறு பார்வைக்காக ஏங்கித் தவிக்கிறது என் மனம்.

நீங்கள் அறியாமல் உங்களை ரசிப்பது பிடிக்கிறது. உங்களோடு உங்களுக்காக வாழ வேண்டுமென நெஞ்சம் ஏங்குகிறது. எனது இந்த எண்ணம் சரியா? தவறா? தெரியவில்லை...

இப்படிக்கு

உங்கள் அன்பு சகி

அத்துடன் மித்ரன் அவன் நண்பன் ரவியுடன் அமர்ந்து சாப்பிடுவது போல வரைந்திருந்த ஓவியமும் வந்திருந்தது.

அதைப்பார்த்தவன் அங்கேயும் அவள் வந்திருந்தாளா? என்று ஆச்சர்யத்துடன் எண்ணினான். ஆனால் நான் அவளைப் பார்க்கவில்லையே? அது சரி இப்போது அவள் இங்கே வந்தபோது கூட என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தத்துடன் நினைத்துக் கொண்டான்.

என் சகியேDonde viven las historias. Descúbrelo ahora