என் சகியே - 9

2.4K 97 24
                                    


மாயம் செய்தாயடி – என்

மனமும் உன் வசமானதடி!!

மறுவீட்டு விருந்திற்காக என்று மித்ரனும், பிரியசகியும் சங்கரன்குடியிருப்பில் உள்ள பிரியசகியின் பிறந்த வீட்டிற்கு வந்திருந்தனர். பொன்செல்வனும், பானுமதியும் தடபுடலான விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

மதிய உணவிற்கு பின், அனைவரும் ஹாலில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின் பொன்செல்வன் பிரியசகியிடம், மாப்பிள்ளை கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும் பிரியா, நீ அவரை ரூமிற்கு கூட்டிட்டுப் போம்மா என்றார்.

அவள் தயக்கத்துடன் மித்ரனைப் பார்க்க, அவனோ அவர்களிடம் ஒரு சிறு தலையசைவுடன் எழுந்து கொண்டான். பின் அவனை அவளது அறைக்கு அழைத்துச் சென்றாள் பிரியசகி.

அறையைச் சுற்றிப் பார்வையைப் படர விட்டான் மித்ரன். அளவான அறைதான். அதில் அனைத்து பொருட்களும் ஒருவித நேர்த்தியுடனும், அழகுடனும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

சுவரில் அங்கங்கே அவள் வரைந்த ஓவியத்தை மாட்டி வைத்திருந்தாள் பிரியசகி. அதைப் பார்த்தவன், ரசனை உள்ளவள் தான் போல என்று எண்ணிக் கொண்டான்.

இதுவே சகியின் அறையாய் இருந்திருந்தால், அங்கே அவள் வரைந்த ஓவியங்களை தான் மாட்டி வைத்திருப்பாள் அல்லவா? என்று நினைத்துக் கொண்டான். சகியின் நினைவு வந்ததும் அவன் மீதே அவனுக்குக் கோபம் வந்தது.

அதனால் கையை ஓங்கி கட்டிலின் மேல் குத்தினான் மித்ரன். அதைக்கண்டு பதறிப் போனாள் பிரியசகி. என்னங்க என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு கோபம்? இங்கே ஏதாவது பிடிக்கலையா? என்று கேட்டாள்.

ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு கட்டிலில் படுத்து கண்மூடிக் கொண்டான். இரவிலும் சரியாக உறங்காததால் உடனே உறங்கியும் விட்டான் அவன்.

என் சகியேWhere stories live. Discover now