உன் மனம் ஏங்கித் தவிப்பது எனக்காக...!!
அறிந்த நொடியில் ஆனந்தம் கொண்டேன்!!
மித்ரன் – பிரியசகியின் திருமணம் நடந்தும் ஒரு மாதமாகி விட்டது. இப்போதெல்லாம் இருவரும் ஒரளவு சாதாரணமாகவே பேசிக் கொள்கின்றனர்.
மித்ரன் பிரியாவோடு பேசும்போதெல்லாம் மனதில் சகியின் நினைவு எழுவதைத் தடுக்க முடியவில்லை அவனால். எனவே அவளிடம் அளவாகவே பேசினான். பல விதத்திலும், தான் சகியை எப்படி கற்பனை செய்திருந்தானோ அப்படியே இருந்தாள் பிரியாவும்.
பிரியாவும் அர்ஜுனும் காதலித்தார்கள் என்று அவனால் நினைக்க முடியவில்லை. முதலில் வெளி ஆளாக இருந்து பார்க்கும் போது தவறாகத் தெரிந்த அனைத்தும் இப்போது அப்படி இல்லை என்றே தோன்றியது. அவர்களுக்கிடையில் ஒரு ஆழமான நட்பு இருப்பதாகவே உணர்ந்தான்.
மறுவீட்டு விருந்திற்காக என்று அவர்கள் வீட்டில் இரண்டு நாள்களில் அவர்களை அவன் இவ்வாறு தான் உணர்ந்தான். அவர்கள் இருவரும் காதலித்திருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு திருமணம் நடந்திருக்கும் வாய்ப்புகளே அதிகம். ஆனால் அவர்களுக்கு திருமணம் நடக்கவில்லை. காரணம் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே. எனவே அவள் அர்ஜுனைக் காதலித்திருக்க முடியாது என்றே நினைத்தான்.
அதைவிடப் பிரியாவின் பார்வையில் தன்மீதான காதலை உணர்ந்தான் மித்ரன். ஆனாலும் அன்று பிரியா, நம் காதலைப் பற்றி நீதான் வீட்டில் பேச வேண்டும் என்றும், வேறு யாருடனும் திருமணம் நடந்தால் செத்துப் போய் விடுவேன் என்றும் அர்ஜுனிடம் ஏன் கூறினாள் என்று இன்றுவரை புரியவில்லை அவனுக்கு.
ஆனால் இப்போது தனக்காக என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்கிறாள் அவள். ஒருவேளை அது கணவன் என்பதால் தன்மீது வந்த நேசமாகக் கூட இருக்கலாம். அதேபோல இனி தானும் பிரியாவைத் தான் நேசிக்க வேண்டும்.
இருப்பினும் அவனால் சகியின் மீது வைத்த நேசத்தை அவ்வளவு எளிதாய் மாற்ற முடியவில்லை. அதற்கும் பிரியா தான் காரணம். பிரியாவின் ஒவ்வொரு செயல்பாடும் சகியை நினைவுபடுத்தியது அவனுக்கு. சகி தன் வாழ்வில் இணைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணமே தோன்றியது.
YOU ARE READING
என் சகியே
General Fictionஹீரோ - மித்ரன் ஹீரோயின் - பிரியசகி லாஜிக் பார்க்காம ஸ்டோரி படிங்க என்ஜாய் பண்ணுங்க மறக்காம vote & comment pannunga viewers