epilogue

1.2K 71 36
                                    

நான்கு மாதங்களுக்கு பிறகு

அந்த ஹோட்டல் அறையின் பால்கனியில் நின்றுகொண்டு அதீதமான குளிரால் உள்ளங்கை இரண்டையும் தேய்த்து கண்ணங்களில் வைத்து அந்த காலை வேளையை ரசித்துக்கொண்டிருந்தாள் நந்தினி.

இரண்டு வலிய கரங்கள் அவளது இடையை பின்புறமிருந்து அணைத்து தன்னுடன் சேர்த்துக்கொள்ள குளிர் சிறிது மட்டுப்பட்டு இருந்தது.

" இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க , அதுவும் இவ்வளவு காலையில " என்று வினவிய தன் கணவனின் மீது வாகாய் சாய்ந்துகொண்டு அவன் கரங்களை எடுத்து கண்ணங்களில் வைத்துக்கொண்ட நந்தினி, "இந்த மாதிரி ஒரு குளிருல காலையில வெளிய நிக்குற சுகமே தனி தெரியுமா, அதுவும் இப்படி உங்களோட அருகாமையால கிடைக்கிற இந்த இதம் இருக்கே அப்பப்பா....," என்று மேலும் அவனுடன் ஒன்றினாள்.

அவளை அணைத்த நிலையிலே அறையினுள் அழைத்து சென்றவன் கட்டிலில் அமர்ந்து அவளையும் அருகில் அமர்த்திக்கொண்டான்.அவளோ அவனுடைய அணைப்பிலிருந்து விடுபட விரும்பாமல் மீண்டும் அவனின் கைகளுக்குள் சென்று அமர்ந்து கொண்டாள்.மெல்லிய புன்னகை இதழில் தவழ மனதில் சுகமும் இதமும் பரவ கண்களை மூடி அந்த நிலையை அனுபவித்தான் கைகள் தன் போக்கில் தன்னவளின் மேனியில் ஊர்வலமிட அவளது சினுங்கள்களை ரசித்திக்கொண்டு மெய்மறந்து இருந்தான் .

அவனது நான்கு வருட தவமல்லவோ இது தன்னவளின் உரிமையான அருகாமை. அவனது எண்ணங்கள் பின்னோக்கி பயணப்பட்டது.

ஷிவச்சந்திரன் நந்தினியின் திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் கடந்திருந்தாலும் நந்தினி தன் கணவனிடமிருந்து விலகியே இருந்தாள். அவனுக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்தாலும் அவளிடம் ஒரு ஒதுக்கம் என்றுமே இருந்து வந்தது.தனக்கு தேவையானவற்றை உரிமையுடன் வாய் திறந்து கேட்க மாட்டாள்.அவளது தேவை அறிந்து அவனாகவே அதை செய்வான்.

ஆனால் சமீபகாலமாக தன் கூட்டுக்குளிருந்து மெதுவாக வெளிவரத் துவங்கியிருக்கிறாள், அவளின் செயல்களிலும் பேச்சிலும் ஒரு நெருக்கத்தை உணர முடிந்தது.அவளது இந்த மாற்றத்திற்கான காரணம் அறியாத போதிலும் அவளது நெருக்கத்திற்காக காத்திருந்தவன் மனது சந்தோஷத்தில் துள்ளியது.இதோ இருவரும் தங்களது குழந்தையை அவனுடைய தாயிடம் விட்டுவிட்டு தனியாக நாட்களை செலவழிக்க இந்த மலைபிரதேசத்திற்கு வந்திருந்தனர்.

தனது எண்ணத்தில் மூழ்கியிருந்தவன் திடீரென்று மூக்கில் ஏற்பட்ட வலியால் சுயநினைவடைந்து பார்கையில் நந்தினியின் கோபமுகம் அவனது முகதிற்கு வெகு அருகில் இருந்தது.

" ஏன்டி என்னை கடிச்ச??" என்று தன் மூக்கை தேய்த்துக்கொண்டே பொய் கோபத்துடன் கேட்டான்.

" நான் ஒருத்தி பக்கத்துல இருக்குறது கூட தெரியாம அப்படி என்ன யோசனை உங்களுக்கு??" இடுப்பில் கை வைத்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபத்துடன் இரு கைகளையும் இடுப்பில் வைத்து முறைத்துக்கொண்டு நின்றவளின் தோற்றம் ஷிவானின் மனதை தட்டி எழுப்ப அதை மறைத்துக்கொண்டவன் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு," நம்ம மதுரா குட்டிக்கு இரண்டு வயசாகிடுச்சு...அவளுக்கு விளையாட ஒரு தம்பி பாப்பா ரெடி பண்ணலாமா? இல்லை தங்கச்சி பாப்பா ரெடி பண்லாமா னு யோசிச்சேன், நீ சொல்லு ஆணா?? பெண்?? ," என்று அவளை நோக்கி கேட்டான்.

அவன் எதோ முக்கியமான விஷயம் கூறப்போகிறான் என்று கவனதாதுடன் கேட்டவள் , அவன் இவ்வாறு கேட்கவும் நாணத்தில் முக் சிவக்க தன் முகத்தை அவன் மார்பில் மறைத்துக்கொண்டு," எனக்கு குட்டி ஷிவா தான் வேணும் ," என்றுரைத்தாள்.

"ஏற்பாடு பண்ணிட்டா போச்சு ," என்று கூறி அவன் அவளை சீண்ட அவள் சினுங்கினாள்.

அவனது சீண்டல்களும் அவளது சினுங்கள்களும் தொடர்ந்துகொண்டிருக்க , அவர்களுக்கு தனிமையை கொடுத்துவிட்டு நாம் அவர்கள் வாழ்வு இன்று போல என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி விடைபெறுவோம்.

💐💐💐💐💐💐சுபம்💐💐💐💐💐💐

🎉 You've finished reading ஞாபகங்கள் தாலாட்டும் (முடிவுற்றது) 🎉
ஞாபகங்கள் தாலாட்டும் (முடிவுற்றது)Where stories live. Discover now