கதவை திறந்தவன் அங்கே தன் தந்தையை எதிர்பார்க்கவிலல்லை என்பது.அவனது முக மாற்றத்திலிருந்தே தெரிந்து கொண்டவர் அதை பற்றி ஏதும் கூறாமல் உள்ளே நுழைந்தார்.
" அப்பா....என்ன திடீருனு வந்திருக்கீங்க??"
" ஏன் நான் வரகூடாது ?"
" அப்படியெல்லாம் இல்லையா திடீருனு வந்திருக்கீங்களேனு கேட்டேன்."
" வர வேண்டிய வேலை வந்திடுச்சு.சரி நீ உடனே என்கூட கிளம்பு."
" எங்கபா கிளம்பனும்.?"
" எங்கனு சொன்னாதான் சார் வருவீங்களோ?"
" அப்படியில்லபா அடுத்த மாசம் ஃபைனல் எக்ஸாம் வருது அதுக்கு ப்ராஜெக்ட் இன்னும் முடிக்கலை.வேலை இருக்குபா."
" அதெல்லாம் எனக்கு தெரியும் நீ முதல்ல என்கூட மும்பை கிளம்பு,"என்ற தன் தந்தையை புரியாமல் பாரத்த கௌதம்," அப்பா....நீங்க என்ன சொல்றீங்க நான் இப்ப மும்பை வந்தா இங்க படிப்பு என்ன ஆகும்."
" கௌதம் இப்ப நீ கிளம்பு மத்ததை அப்பறமா பேசிக்களாம்." என்று கண்டிப்புடன் கூறிய தந்தையை வேறு வழி தெரியாமல் பின் தொடர்ந்தான்.
இருவரும் கௌதம் தந்தையின் காரில் பயணம் செய்ய கௌதம் தன் செல்பேசியில் நந்தினிக்கு மெசேஜ் அனுப்ப முயல," கௌதம் உன் ஃபோன கொடு என் மொபைல் ல சார்ஜ் இல்லை," என்று கூறி அவன் மொபைலை கை பற்றியவர் அதற்கு பின் அவனிடம் அதை கொடுக்கவில்லை.
************
அன்று நடந்தவற்றை நந்தினியிடம்.கூறி.முடித்த கௌதம்,"
அன்னைக்கு இப்படி தான் என் மொபைல் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆச்சு அதுக்கபுறம் என் கையில மொபைல் கிடைக்கிலை நந்தினி." என்று கூறி நிறுத்தினான்." ஏதாவது பேசு . நான் ஏன் வரலைனு உனக்கு தெரிஞ்சுக்க வேணாமா??"
" அதை தெரிஞ்சு நான் என்ன பண்ண.போறேன் கௌதம்."
" ம்.......இருந்தாலும் சொல்ல வேண்டியது என் கடமை நன் சொல்றேன்.
நான் படிச்ச காலேஜ்ல இருந்து என் மேல புகார் போயிருக்கு நான் ஒழுங்கா காலேஜ் வரதில்லை னு , இப்படியே போனா அவனால பரீட்சை எழுத முடியாது அப்படீனு வார்னிங் லெட்டர் எங்க அப்பாவுக்கு போயிருக்கு, அதனால தான் அவரு எங்கிட்ட எதுவுமே சொல்லாமா அவசரமா என்னை மும்பை அழைச்சுகிட்டு போயிட்டாரு,
நானும் உங்கிட்ட பொறுமையா பேசி புரிய வைச்சகடலாம் னு நினைச்சேன், ஆனால் மும்பை ல நான் கிட்டதட்ட ஜெயில் ல தான் இருந்தேன்.
YOU ARE READING
ஞாபகங்கள் தாலாட்டும் (முடிவுற்றது)
Short Storyஞாபகங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாதவை. வருடங்கள் பல கடந்து போனாலும் பசுமரத்தில் அடித்த ஆணி போல நம் நினைவில் நிற்கக்கூடியவை. ஏதோ ஒரு சந்தர்பத்தில் மட்டும் வரும் ஞாபகங்களும் உண்டு நம் அன்றாட வாழ்க்கையில் நம்மோடு பயணிக்கும் ஞாபகங்களும் உண்டு. ...