தன் கடந்த காலத்து நினைவுகளில் மூழ்க்கியிருந்த நந்தினி தன்னை யாரோ அழைக்கும் குரல் கேட்டு சுயநினைவடைந்தாள்.அப்பொழுதுதான் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து பார்த்தவள், தான் வழக்கமாக தன் மகளை அழைத்து வரும் சிறுவர் பூங்காவில் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள்.
கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை அடைந்த நத்தினி தன் இல்லம் நோக்கி நடக்கலானாள்.
நந்தினி இல்லத்தை அடைந்ததும் " அம்மா.............." என்று கத்திக்கொண்டே நந்தினியின் மகள் மதுரா அவளை கட்டி அனைத்தாள்.
தன் மனவேதனை அனைத்தும் காற்றுப்போன பலூன் போல லேசானதாக உணர்ந்த நந்தினி தன் தேவதையை தன் கைகளுக்குள் பொக்கிஷமென ஏந்தி கண்ணத்தில் முத்தமிட்டாள்.
" ஏன்மா இவ்வளவு லேட்..?" என்று ஏக்கத்துடன் கேட்ட தன் மகளின் வார்த்தைகளால் குற்ற உணர்வு தோன்ற அதை மறைத்துகொண்டு பேச்சினை திசை திருப்பினாள்.
நேரம் வேகமாக செல்ல அந்த வீட்டுத் தலைவனின் வருகைக்காக அந்த இரண்டு பெண்களும் காத்திருந்தனர்.
" அம்மா..... அப்பா எப்ப வருவாங்க?"
" வந்திருவாங்க செல்லம் என் செல்லத்தை பார்காம அவங்களால இருக்க முடியாது இல்லையா?'
இருவரும் உறையாடிக்கொண்டிருந்தாலும் நந்தினியின் எண்ணங்கள் தன் இறந்தகாலத்தை நோக்கி பயணப்பட்டது.
கௌதம் சக்கரவர்த்தி , பெரும் தொழிலதிபரனான வாசுதேவனின் மூத்த மைந்தன்.சென்னையின் புகழ்பெற்ற கல்லூரியில் நானோடெக்னாலஜி (nanotechnology )மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறான்.
படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்த மாணவன்.அக்மார்க் நல்லவன் என்று சொல்ல முடியாத இன்றைய இளைஞரின் மனநிலையில் வாழும் ஒரு கல்லூரி மாணவன்.
கௌதமிடம் நன்றி சொல்வதற்காக அழைத்த நந்தினி சிறு நலம் விசாரிப்புகளுக்கு பிறகு தன் நன்றியை தெரிவித்தாள்.
YOU ARE READING
ஞாபகங்கள் தாலாட்டும் (முடிவுற்றது)
Short Storyஞாபகங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாதவை. வருடங்கள் பல கடந்து போனாலும் பசுமரத்தில் அடித்த ஆணி போல நம் நினைவில் நிற்கக்கூடியவை. ஏதோ ஒரு சந்தர்பத்தில் மட்டும் வரும் ஞாபகங்களும் உண்டு நம் அன்றாட வாழ்க்கையில் நம்மோடு பயணிக்கும் ஞாபகங்களும் உண்டு. ...