அங்கே அந்த அறையில் அவள் கௌதமை எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் அதிர்ந்த விழியை கண்டவன் அவளை நோக்கி அடி எடுத்து வைக்க துவங்கினான்.அவன் அவளை நெருங்க நெருங்க நந்தினியின் கால்கள் பின்னோக்கி நடந்தது, அவளின் இதயமோ வெளியே கேட்கும் அளவு சத்தமாக துடித்தது.
" என்ன பார்த்து ஏன் பயப்படுற நந்து....நான் உன் கௌதம் தானே?? "
" இல்லை நீ....நீங்க...என் கௌதம் இல்லை , நானும் உங்க நந்து இல்லை, நான் திருமதி ஷிவச்சந்திரன், உங்களுக்கும் எனக்கும் இருந்த உறவு இப்ப இல்லை, என் வாழ்க்கையில உங்களுக்கு இடம் இல்லை," என்று கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே நடுங்கும் குரலில் கூறினாள் நந்தினி.
" ஏன் அப்படி சொல்ற?? நான் ஏன் அன்னைக்கு உங்க அப்பாவை பார்க்க வரலை அப்படீனு உனக்கு தெரிய வேண்டாமா???"
" வேண்டாம்......எனக்கு எதுவும் தெரிய வேண்டாம் என்னை கொஞ்சம் நிம்மதியா வாழவிட்டா அதுவே போதும், என்னோட கணவர் மிகவும் நல்லவர் அவருக்கு என்னால துரோகம் செய்ய முடியாது...,ப்ளீஸ்....நீங்க என் வாழ்க்கையோட முடிஞ்சு போன அத்தியாயம் , முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும், திரும்பவும் என்னோட அழகான வாழ்க்கையில நீங்க வராதீங்க.....," என்று இருகைகள் கூப்பி கண்களில் கண்ணீர் வடிய நின்றவளின் கோலம் கண்ட கௌதம் சர்வமும் அடங்க அங்கிருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தான்.
" ஏன் நந்தினி ??ஏன் என்னை கொல்ற?? நான் அவ்வளவு மோசமானவனா?? ஏன் இப்படி எங்கூட பேசக்கூட தயங்குற??நான் அப்படி என்ன பாவம் செஞ்சேன்???நீ கேட்க விரும்பலை அப்படீனாலும் உங்கிட்ட காரணத்தை சொல்றது என் கடமை , உங்க அப்பாகிட்ட பேசுறதுக்காக வீட்டுக்கு கிளம்பிக்கிட்டு இருந்தேன் அப்போ திடீருனு எங்க அப்பா வந்தாங்க."
ஒரு சிறு இடைவெளி விட்டு நந்தினியை நிமிர்ந்து பார்தான் , அங்கே அவள் கௌதமை பார்காமல் கீழே குனிந்து அமர்ந்திருந்தாள்.அவளின் முகத்தில் தெரிந்துகொள்ள வேண்டிய ஆர்வம் ஏதுமில்லை என்பதை உணர்ந்த கௌதம் சிறு ஏமாற்றம் அடைந்தான்.

VOUS LISEZ
ஞாபகங்கள் தாலாட்டும் (முடிவுற்றது)
Nouvellesஞாபகங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாதவை. வருடங்கள் பல கடந்து போனாலும் பசுமரத்தில் அடித்த ஆணி போல நம் நினைவில் நிற்கக்கூடியவை. ஏதோ ஒரு சந்தர்பத்தில் மட்டும் வரும் ஞாபகங்களும் உண்டு நம் அன்றாட வாழ்க்கையில் நம்மோடு பயணிக்கும் ஞாபகங்களும் உண்டு. ...