அந்த அழகிய மாலை நேரத்தில் சூரியன் தன் இருப்பிடம் நோக்கி செல்லத் துவங்கியிருந்த வேளை தன் நண்பன் கௌதம் சக்கரவர்த்தியுடைய முகத்தை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான் அவனது உயிர் நண்பன் சந்தோஷ்.
" ஏதோ பேசனும்னு என்னை கூட்டிட்டு வந்துட்டு இப்படி அமைதியா எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம் சந்தோஷ்??" என்று தன் நண்பனை நோக்கி வினவினான்.
" பேசனும் தான் ஆனா எப்படி ஆரம்பிக்குறது னு புரியலை?"என்று அவனை பார்த்து மீண்டும் வினவினான் .
" ம்.... இவ்ளோ தூரம் வந்தாச்சு ல் கேட்க நினைச்சதை பட்டுனு கேட்டுடு,"
" சரிடா கௌதம் நான் உனக்கு உயிர் நண்பன் , ஆனால் எனக்கு தெரியாம உன் வாழ்க்கை யில இருக்குர விஷயத்தை நான் தெரிஞ்சுக்கனும்," என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்தை கூறிய தன் நண்பனை ஒரு முறை புன்னகையுடன் ஏறிட்ட கௌதம்," வேண்டாம் சந்தோஷ் அது என் வாழ்கையோட ஒரு அழகான முற்றுப்பெறாத அத்தியாயம் ," என்று வேதனையுடன் கூறினான்.
தன் நண்பனின் வாழ்வில் ஒரு பெண் இருக்கிறாள் என்பதுவரை மட்டுமே சந்தோஷால் யூகிக்க முடிந்திருந்தது. அதற்கு காரணமும் கௌதமே, நந்தினியுடனான அவனது உறவிற்கு பின்னர் அவன் தன் தோழர்களிடமிருந்து விலகி நின்றான், யாரிடமும் நெருங்க முயலவில்லை , பழைய கலகலப்பான கௌதமிற்கு பதிலாக அமைதியான ஆர்பாட்டமில்லாத கௌதமே சந்தோஷ் சந்தித்தது.
" என்ன நடந்துச்சு கௌதம் அந்த பொண்ணு எங்க இருக்காங்கனு சொல்லு எப்படியாவது அவங்களை சமாதானப்படுத்தி உன் கூட சேர்த்து வைக்கிறேன்," என்று கூறிய தன் நண்பனை பார்த்த கௌதம்," நீ என் மேல வச்சிருக்கிற பாசத்தை நினைச்சு சந்தோஷப்படுறதா??இல்லை என்னவளை தொலைச்சதை நினைச்சு வருத்தப்படுறதானு தெரியலை," என்று குரலில் விரக்தியுடன் கூறினான்.
" கௌதம் ப்ளீஸ்.... என்னாச்சு?? நீ இந்த அளவு யாரை விரும்பின??" என்று ஆற்றாமையுடன் வினவினான்.
YOU ARE READING
ஞாபகங்கள் தாலாட்டும் (முடிவுற்றது)
Short Storyஞாபகங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாதவை. வருடங்கள் பல கடந்து போனாலும் பசுமரத்தில் அடித்த ஆணி போல நம் நினைவில் நிற்கக்கூடியவை. ஏதோ ஒரு சந்தர்பத்தில் மட்டும் வரும் ஞாபகங்களும் உண்டு நம் அன்றாட வாழ்க்கையில் நம்மோடு பயணிக்கும் ஞாபகங்களும் உண்டு. ...