தன் அருகே குழந்தை போல உறங்கும் கணவனை பார்த்த நந்தினியின் முகத்தில் அழகிய புன்னகை விரிந்தது.வேகமாக தன் கணவனின் தூக்கத்தை கலைக்கும் அலாரத்தை ஆப் செய்தவள், மெதுவாக எழுந்து அமர முயற்சித்தாள் அவளை ஒரு இரும்பு கரம் இடையில் தடுக்க அந்த கையை தன் கணவனின் தூக்கம் கலையா வண்ணம் எடுக்க முயற்சித்தாள் அந்த கள்ளனின் பிடியோ இரும்பாக இருந்தது, அவன் தூங்கவில்லை என்பதை உணர்ந்தவள்," என்னங்க டைம் ஆயிடுச்சு நான் போகனும் , " என்று கூறி சினுங்கினாள்.
" இனி..... இந்த அழகான விடியலோட பனி உடம்புக்கு குளிருது அதுக்கு நீ தான் மருந்து," என்று கூறி மேலும் அவள் மீது படர்ந்தான் அந்த கயவன்.
அவன் அயர்ந்த நேரம் அவனிடமிருந்து தப்பித்த நந்தினி அவனுக்கு பழிப்புகாட்டிவிட்டு பாத்ரூமில் சென்று கதவடைத்துகொண்டாள் .அவளது சிரிப்பு சத்தமே அறைமுழுவதும் நிரம்பி இருந்தது.
அவளின் செயலில் கடுப்பான ஷிவா ," எங்க போனாலும் எங்கிட்ட தானே வரனும் அப்ப உன்னை என்ன பண்றேன் பாரு ," என்று கடுப்புடன் எழுந்து கொண்டான்.
சிறிது நேரத்தில் முகத்தில் புண்சிரிப்புடனும் கையில் காபியுடனும் தன் கணவனை நோக்கி சென்றாள் நந்தினி.
நந்தினியை நிமிர்ந்தும் பாராமல் தன் கப்பை அமைதியாக எடுத்த தன் கணவனை ஆசையுடன் பார்த்த நந்தினி அவன் அருகே இடித்துக்கொண்டு அமர்ந்தாள்.
அவளை கடுப்புடன் பார்தவன் , சற்று தள்ளி அமர்ந்தான். அவனை மேலும் தொந்தரவு செய்யாமல் அவனை பார்த்தவண்ணம் அமைதியாக அமர்ந்தாள்.அவன் காபி குடித்து முடிக்கும்வரை காத்திருந்தவள் வேகமாக அவனை இழுத்து தன் மடிமீது சாய்த்துக்கொண்டு," அப்பப்பா......என்ன கோபம் வருது, பாருங்க இந்த மூக்கு எவ்ளோ செவந்து போய் இருக்குனு ," என்று கூறிக்கொண்டே அவனை மூக்கின் மீது கிள்ளினாள்.
" ஆ.....ராட்சஷி வலிக்குதுடி....," என்று கூறிக்கொண்டே அவளை விட்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டான்.
YOU ARE READING
ஞாபகங்கள் தாலாட்டும் (முடிவுற்றது)
Short Storyஞாபகங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாதவை. வருடங்கள் பல கடந்து போனாலும் பசுமரத்தில் அடித்த ஆணி போல நம் நினைவில் நிற்கக்கூடியவை. ஏதோ ஒரு சந்தர்பத்தில் மட்டும் வரும் ஞாபகங்களும் உண்டு நம் அன்றாட வாழ்க்கையில் நம்மோடு பயணிக்கும் ஞாபகங்களும் உண்டு. ...