உறக்கம்

37 1 0
                                    

தியானத்தின் வடிவமே..
நீ என்ன பாத்திரத்துக்கு ஏற்றுமாரும்
நீரோ?

வயதுக்கு ஏற்றது போல்
வர்ணஜாலம் காட்டுகிறாயே??

நீ வந்த காலம் போய் உன்னைததேடி அலையும் மானிடம்...

பணம் பெயர் படைத்தவன் வல்லவனல்லவே
படுத்ததும் உனை அணைத்தவாறே அதிர்ஷ்டசாலி அடி நித்திரையே..

குழந்தையில் தாலாட்டுடன் இனிய கனவுகள் தந்து சிரிக்க வைத்தாய்..

பள்ளி பருவத்தில் விளையாட்டு , குதுகலத்த நேரங்களை உளரலாய் பகிரவத்தாய் என்னுடன் சேர்ந்து..

காதலி ஆனவுடன் மயக்கத்துடன் அவன் எண்ணங்களில் கரையவைத்து..
வெட்கம் கொண்டு விழி மூடி அணைத்தாய்..

மிகவு வந்ததும் ஏனடி கோவம்?
உனக்கு போட்டியாக ஒருவர் வந்ததாலோ?
சில அசைவையையும் உணர வைத்து..
உணர்ச்சியோடு உறங்க வைத்தாய்..

ஆனது ஆயினேன் வயதேரியவளாய்..
கடமை முடிந்தது.. இன்னும்‌ என்ன கோவமடி கள்ளி..

வாழ்ந்து பார்த்த வாழ்வை நிழற்படமாய்
ஓட்டிப் பார்க்க ஒர் வாய்ப்பா??
மீண்டும் கருவறை அழைத்து செல்..
இம்முறை பத்து மாத உறக்கமல்ல..
உன்னோடே உள்ளிளுத்துக்கொள் உற்க்கமே!!!!

கவிதைகளின் ஊர்வலம்!!Donde viven las historias. Descúbrelo ahora