மழலை

19 2 2
                                    

தெய்வம் வீடு தேடி வாழ வரும் காலம்...
தெவிட்டாத தேனாய் வாழ்வு மாரும் காலம்....

இன்பத்தின் திறவுகோல்..
முழுமையின் முழு பரிமாணம்..

பல்லில்லா சிரிப்பில் பலமுறை என்னைத் தொலைத்தேன்..
பால் போன்ற தூய்மையில் பரவசம் கண்டேன்...

அள்ளி அள்ளி முத்தமிட்டும் ஆசை இன்னும் கூடுதடி..

உனை விருபம்பாத மனமும் உண்டோ?

குயில் கூட‌ கூடி நிற்கும் உன் மொழி கேட்டால்..

நக்கீரரும் நவில‌ துடிப்பார் உன்‌ சொல் தனை..

ஒவ்வொரு உயிரிலும் நீ புதுமை..
அனைத்தில் நீ காட்டனாய்‌ அழகை ..
நீ பதுமை..

விரும்புகிறேன்‌ மழலையாய் மாற என் தாய்மடி சேர..

ஒழுகிய எச்சிலுடன் ஒய்வில்லாத சிரிப்புடன்..

வலி அறியாத மனதுடன்..
விருப்பு வெறுப்பு இல்லா இதயம் கொண்டு..

நானும் மகிழ்ந்து அனைவருக்கும் மகிழ்ச்சி தந்த மழலையாய் மாறும் வாய்ப்பை
பரிசளிப்பாயா என் இறைவா???

கவிதைகளின் ஊர்வலம்!!Tempat cerita menjadi hidup. Temukan sekarang