Chap 1

4.8K 110 6
                                    

இன்னும் இரண்டு நாட்களில் திருமணம், இந்த கல்யாணம் நின்று விட கூடாதா என்று ஒரு மனம், இவனை விட்டால் வேறு ஒருவனையும் எற்காது என்று இன்னொரு மனம் இரண்டிற்கும் நடுவில் போராடிக் கொண்டிருந்தாள் நம் மதி.

"ஏய் மதி கெளம்பு டி, மாமன் சீர் செய்யனும், அத்தை எல்லாம் தண்ணி ஊத்த வந்துருவாங்க, என்ன புடவ கட்டணும்னு எடுத்துக்கோ" என்று அவளின் அக்கா கயல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"கயல் பயமாயிருக்கு டி!!"

"என்னது பயமா??? உனக்கா??? நான் இத நம்பணும்?? போடி வேல இருக்கு"

பத்து நிமடத்தில் அவளின் அத்தை சொத்தை வந்துவிட, மாமன் சீர் ஆரம்பாமானது..

பச்சை வண்ண பாவாடை தாவணியில் அவளின் அழகு அழகாய் தெரிய பால் வண்ணத்தில் தேவதையாய் இருந்தாள்.

கன்னங்களில் மஞ்சள் பூசி சீர் ஆரம்பிக்க, மதி எவ்ளோ அழகா இருக்க என்று அவள் அன்னை சாந்தி திருஷ்டி கழித்தாள்

சீர் முடிக்க, தண்ணிர் ஊத்த, கயல் இவள் செய்த சேட்டைக்காக, சுடு தண்ணிர் வெய்க்காமல் பச்சை தண்ணிர் வெய்க்க அது தெரியாமல் அவள் அத்தை எடுத்து ஊத்த, "ஐயொ அம்மாஆஆஆ" என்று மதி அலறினாள்.

"நான் தான் பச்ச தண்ணி வெச்சேன், உன்ன பழி வாங்க தான், எவ்ளோ சேட்டை பண்ணிருப்ப!! சுடு தண்ணி எடுத்துட்டு வரேன் இருங்க" என்றாள்

"எவ்ளோ வில்லத்தன்ம்!! உன்ன பாத்துக்கறேன் டி" - மதி

"சித்தி, எரியுதா? அம்மா ஏன் அம்மா இப்படி பண்ணிங்க?? சித்தி பாவம்" என்று முன்று வயது ரித்து அவளுக்காக பேசினாள்

"ஒன்னும் இல்லை டா தங்கம், உங்க அம்மாவ அப்பறம் பாத்துக்கலாம், சரியா?" என்க

"டீல்" என்றாள் ரித்து

சீர் நன்றாக முடிய, தங்க நிற பட்டு சேலை உடுத்தி வந்தாள். சாமி கும்பிட்டு முடித்து, வண்டியில் எறி மண்டபம் நோக்கி புறப்பிட்டார்கள்.

கல்யாணம் நல்லபடியாக முடியுமா? என்ற கவலையுடன் இருந்தாள்.

அவர்கள் மண்டபம் செல்லுவதற்குள், அவனை பற்றி பார்போம்!!

"சசி, டேய் சசி" என்று அவனை உலுக்கினாள் அவன் நண்பன் வினோத்

"ம்ச் என்ன டா?"

"என்ன டா வா? ஏன் டா இப்படி இருக்க?"

"பின்ன எப்படி இருக்க சொல்ற? அவள எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது டா, உனக்கு தான் தெரியும்ல?? கல்யாணத்த நிறுத்து டா please"

"டேய் இன்னும் கொஞ்ச நேரத்துல மண்டபம் போகணும், நாளைக்கு கல்யாணம் உங்க அப்பா கிட்ட நீ போய் பேசுவியா?"

"நான் பேசி திட்டு வாங்குனது போததா?அம்மா வேற அழுதே சாதிக்கறாங்க, இவள தான் பிடிச்சுருக்குன்னு"

"என்ன மந்திரம் போட்டாளோ, கல்யாணம் மட்டும் ஆகட்டும், அவளுக்கு இருக்கு"

"சரி வா போலாம், நேரமாகுது!!"

"என்ன நடக்க போகுதோ!!!" - வினோத்

பட்டாம்பூச்சி சிறகுகள்Where stories live. Discover now