"உன் அன்பிற்கு நான் அடிமையடி!!!!!.... "
திருவிழா நல்லபடியாக முடிய, சசி-மதியிடம் இருந்த காதல் பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர்.
மறுவீடு செல்வதற்காக சசி கார் எடுக்க, கார் வேண்டாம் பைக்கிலே செல்வோம் என்று மதி கூற, இருவரும் மகிழ்ச்சியாக பைக்கில் சென்றனர்.
மதியின் பெற்றோர் மூர்த்தி-சாந்தி அவர்களை வரவேற்று நன்றாக உபசரித்தனர்.
பிறந்த வீடு வந்த மகிழ்ச்சியில் மதியின் பழைய துள்ளல் திரும்பியது.
"என்ன மா? நான் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியறேனா??" - மதி
"நல்லாவே தெரியற, எதுக்கு என்ன இப்போ?" - சாந்தி
"இல்ல, நான் இங்க இருக்கற மாறியே நடந்துக்க மாட்டிறிங்களே?? அதான் கேட்டேன்" - மதி
"உனக்கு என்ன வேணுமோ போய் எடுத்துக்கோ!! என்ன தொந்தரவு செய்யாத!! நான் மாப்பிள்ளைக்கு பிடித்த கேசரி செய்யனும்.!!"
"இதெல்லாம் ரொம்ப ஒவர் மா!!! எனக்கு குலோப் ஜாமுன் எங்க?"
"அதுவா?? நாளைக்கு செஞ்சு தரேன்!!"
"பாத்துக்கறேன் உங்கள அப்பறமா!!"
"அவளுக்கு பொறாமை அத்தை!! நீங்க நல்லா நிறைய நெய் ஊத்தி, கேசரி கிண்டுங்க" என்று சொல்லி தோட்டத்தின் அருகில் கால் நீட்டி தரையில் அமர்ந்துக் கொண்டான்.
அங்கே இருந்த சாமங்கி செடி காற்றில் மணம் வீசி அவன் மனதைக் கவர,
அந்த நேரம் அங்கே கோவமாக சண்டை போட மதி வந்து, "ஏன் இப்படி பண்றிங்க?" என்று கேட்க,
அவளை கீழே அமர வைத்து, அவள் மடியில் அவன் தலை சாய்த்தான்.
"நல்லா காத்து வீசுது இல்ல???" - சசி
"ஆமாம், அம்மா வந்துடுவாங்க, நான் போகணும்!!" என்றவளை,
"அதெல்லாம் வர மாட்டாங்க அமைதியா இரு" என்றதும், அமைதியானாள்.
செடியின் வாசனை, அவளின் மடியின் இதம், சுகமான காற்று என்று அவனுக்கு கண்கள் சொருக, அவள் மடியிலே உறங்க ஆரம்பித்தான்
அவனின் சிரம் கோதி, அவனைப் பற்றிய யோசிக்கலானாள்.
"எப்படி இவன் மாறினான். இந்த மாற்றம் நிரந்தரமா????"
மெதுவாய் குனிந்து, அவனின் நெற்றியில் முத்தம் பதித்தாள்.
-------------------------
இனிமையான மாலை பொழுதில், இருவரும் வெளியில் செல்லாம் என்று தோன்ற, மதி அவளின் வண்டியில் தான் வர வேண்டும், அதுவும் அவள் தான் வண்டி ஓட்ட வேண்டும் என்று அடம்பிடித்து, அவனுடன் வெளியில் சென்றாள்.
அங்கே இருந்த பிரபல கடையில் துணிகள் எடுத்து, வெளியில் வர அங்கு பஞ்சு மிட்டாய்க்காரன் கண்ணில் பட அதைப் பார்த்து விழி விரித்தவள், சசி என்ன நினைப்பானோ என்று அமைதியாக இருந்தாள்.
சசி அவளின் ஆசையை அறிந்து பஞ்சுமிட்டாய் வாங்கித் தந்தான். இவனின் இந்த அன்பு என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று எண்ணிய வேளையில், அங்கு அவன் வந்தான்!!!!!!
"டேய் சசி எப்படி டா இருக்க??"
"நல்லா இருக்கேன்!! அப்பறம் எங்க இந்த பக்கம்" - சசி
"சும்மா அம்மா கூட வந்தேன் டா!! மதியைப் பார்த்து ஒரு நிமிடம் திகைத்து, மதி?!!!!....... நீ எங்க இங்க?!?!?!"
"என் கூடத்தான் டா! என் மனைவி மதி!!!"
"என்ன??????"
"ஆமாம் டா கல்யாணம் ஆகிடுச்சு!! சரி டா லேட் ஆகிடுச்சு.. அப்பறம் பார்க்கலாம். மதி வா!!"
பைக்கில் பின் சீட்டில் மதி ஏறி அவனின் தோள் பிடிக்க,
"தள்ளி உட்காரு மதி!!!" காட்டமாக சொன்னான்
எந்த இடைவெளி வரக் கூடாது என்று இருந்தாளோ அது வந்துவிட்டது!!!
எவனை பார்க்கக் கூடாது என்று இருந்தாளோ!!! அவனை பார்த்தாகிவிட்டது!!!!!
YOU ARE READING
பட்டாம்பூச்சி சிறகுகள்
Romanceஎன் முதல் பதிப்பு!!! காதலுக்காக சொன்ன பொய் தவறா சரியா?!? கதையில் பார்ப்போம். உங்கள் கருத்துக்களை பதிவிட்டு ஆதரவளியுங்கள் 🙏😊