"உன் மெளனத்தின் காரணம் நான் அறியேன்!!
என் மெளனத்தின் காரணம் உன்னை நான் அறியேன்!!!!!!!!"மதியும் சசியும் எதுவும் பேசாமல் நாட்களை செல்லுத்தினர்.
மதி, சசியை எப்படி சரி செய்வது என்ற கவலையில் இருக்க, சசி அவளின் மேல் கோவத்தில் சுத்தினான். இருவரின் நடுவே பள்ளம் போல் விரிசல் விழுந்தது.
நாட்கள் நகர, இவர்கள் திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிய, அனுவின் பரிச்சை முடிந்த காரணத்தினால், விடுமுறைக்காக சென்னை வந்தாள் அனு.
அனுவின் சுட்டித்தனம் பிடித்தால், அவளுடன் ஒன்றினாள் மதி.
அவளுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, அரட்டை அடிப்பது, வீதியில் கிரிக்கெட் விளையாடுவது என்று வேலை முடிந்து மீதி நேரம் அணைத்தும் அனுவுடன் செலவழித்தாள். அதில் மதியின் குறும்புத்தனம் மறுபடியும் வெளி வந்தது
அன்று ஞாயிறு, விடுமுறையாதலால், வீட்டின் கீழே உள்ள பார்க் போன்ற பகுதியில் அனுவும் மதியும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இரண்டு மணி நேரம் ஆகியும் இருவரும் திரும்பி வராத காரணத்தினால், சசி கீழே சென்று பார்த்தான்
அங்கே அவன் கண்ட காட்சி!!!!
மதி சுவர் மேல் எறி, அங்கிருந்து மாமரத்தின் மேல் ஏறி, மாங்காய் பறிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
கீழே விழுந்தால், கால் உடைவது உறுதி!!
கோவமான சசி, "அனு!!!!!!!!!!" என்று கத்தினான்.
அவனின் கோவத்தில் மதி ஒரு நொடி நிலை தடுமாறி கீழே விழ, சட்டென்று ஓடி, சசி அவளை கையில் பிடித்தான்.
பயத்தின் சாயல் அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிய, அவளின் பயம் பார்த்து, கோவத்தை குறைத்தான்.
"ஏன் இப்படி பண்ற? கீழே விழுந்திருந்தா என்ன ஆகிருக்கும்? இனிமேல் பொறுப்பா நடந்துக்கோ!!" என்று கூறிவிட்டு சென்றான்
YOU ARE READING
பட்டாம்பூச்சி சிறகுகள்
Romanceஎன் முதல் பதிப்பு!!! காதலுக்காக சொன்ன பொய் தவறா சரியா?!? கதையில் பார்ப்போம். உங்கள் கருத்துக்களை பதிவிட்டு ஆதரவளியுங்கள் 🙏😊