"என் காலை கனவின் ஈரம் நீ தானே!!!!..."
நாட்கள் சிறகு கட்டி செல்ல, கல்லூரி, அரட்டை, குறும்பு என்று சுற்றினாள் மதி.
அன்று கல்லூரியில், சாப்பாடு இடைவேளையில் சாப்பிட்டு முடித்து அவள் வகுப்பு நோக்கி செல்ல, ராதிகாவுடன் கதையளந்தபடியே மேலே பார்க்க, அங்கே மூன்றாம் மாடியில், வெங்கி நின்று கொண்டிருந்தான்.
சாந்த சொருபியாக எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அமைதியாய் இருக்கும் பெண்களையே பார்த்திருந்தவள், அமைதியின் உருவமாய் இருக்கும் வெங்கியை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு!!!
அவனை பார்ப்பதற்காகவே தினமும் மதியம் சிக்கிரமாக கல்லூரி சென்றாள்.
யாருமே இல்லாத இடத்துல யாருக்கு டீ ஆத்துற?? - ராதி
இரு டி வெங்கி எவ்ளோ அழகா பேசிட்டு இருக்கான் பாரு!!
அங்கே வகுப்புகள் இல்லை, எதுவும் இல்லை!! வகுப்புற்கு செல்லும் வழி அது!! அங்கே ராதிகாவை நிறுத்தி, பேசுகிறேன் என்ற பெயரில் வெங்கியை சைட் அடித்துக் கொண்டிருந்தாள்.
அவனை வியந்து பார்த்துக் கொண்டிருந்தவள், அவளையறியாமல் ரசிக்க ஆரம்பித்தாள்.
அவனின் சிறு சிறு நடவடிக்கை கூட அவளுக்கு அத்துப்படி!!
அவன் எப்பொழுதும் முழுக் கை சட்டை தான் அணிவான்! அவன் வீடு எங்கே, அவனுக்கு காதல் கதை எதும் இல்லை, அதில் நாட்டமும் இல்லை, அவனின் கணினி ஆர்வம் என்று அனைத்தையும் அறிந்தாள்!!!
தன்னை சுற்றி இப்படி ஒரு விஷயம் நடக்கிறது என்று எதுவுமே தெரியாமல் இருந்தான் வெங்கி!!
கல்லூரி கல்சுரல்ஸ் நடை பெற, பொது சேவையாளர்கள் கூட்டத்தில் இருந்து, மதிக்கு பரிசுகள் பிரிவின் தலைமையை கொடுத்தான் ஹரி.
மதி எல்லா வேலைகளையும் கணகட்சிதமாய் முடிக்க, பரிசுகள் நேரம் எந்த தடங்களும் இல்லாமல் நன்றாக சென்றது.
இதற்காக, பொது சேவை கூட்டத்தின் போது மதிக்கு தனியாக பரிசளித்தனர்
அதற்காக வெங்கி அவளைப் பார்த்து சிரித்தான்.
அந்த ஒரு சிரிப்பைப் பற்றி சொல்லி சொல்லி!!! ராதிகாவை பைத்தியமாக்கிவிட்டாள் மதி.
மதிக்கு பரிசு வழங்கியதை ஓட்டி, அந்த பொது சேவையில் இருந்த மூன்றாம் வகுப்பு நிதின், மதியிடம் வந்து பேச முயற்சித்து மூக்கறுப்பட்டு போனான்.
மதியின் மேல் ஆசை நிதினிற்கு. அவள் சரியாக பேசாமல், அதுவும் சீனியரை அவமதித்தற்கு அவளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று காத்திருந்தான்.
வெங்கி எங்கு செல்கிறானோ அங்கே மதியும் செல்வாள்.
"ராதிகா ஏன் டி இப்படி பண்ற? லவ் பண்றியா டி" என்று கேட்க
அவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக தலை குனிய, அவள் விருப்பம் அறிந்தாள் ராதி.
நிமிர் நடை கொண்ட மதியை பார்த்தவள்,அவளின் இத்தலைக் குனிவை தாங்கிக் கொள்ள முடியாமல், "அண்ணா ஓட அழகிற்கும், அறிவிற்கும் நீ கொஞ்சம் கம்மி தான்!! பரவாயில்ல, அண்ணாவ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க சொல்றேன" என்று கூற,
"அடிங்க!!" என்று குச்சி எடுத்து துரத்தினாள் மதி.
வெங்கியின் பின்னால் நாய்க்குட்டி போன்று சுற்றி சுற்றி வந்தாலும், என்றுமே அவனிடம் பேச முயற்சிக்கவில்லை மதி. அவனை பார்த்தாலே போதும் என்றிருந்தாள்.
ஒரு சிலர், பார்த்து ரசித்தலே பெரும் வரம் என்று நினைப்பர், மதி அதில் அடக்கம். அவனிடம் பேசி, தன் மனதை புரிய வைத்து, அவனின் பதிலை எதிர்ப்பார்த்து, இவை எல்லாம் தேவையில்லாதது. தன்னுடையது என்று இருந்தால், நிட்சயம் தன்னிடம் தானாக வந்தடையும் என்று உறுதியாக இருந்தாள்.
அவளின் உறுதியை அவளே உடைத்தெறிய போவது தெரியாமல்?!?
கனவுகள் நினைவாகும்!!!
YOU ARE READING
பட்டாம்பூச்சி சிறகுகள்
Romanceஎன் முதல் பதிப்பு!!! காதலுக்காக சொன்ன பொய் தவறா சரியா?!? கதையில் பார்ப்போம். உங்கள் கருத்துக்களை பதிவிட்டு ஆதரவளியுங்கள் 🙏😊