Chap - 4

2.5K 103 2
                                    

மாத்திரையின் வீரியத்தில் ஆறு மணி ஆகியும் தூங்கிக் கொண்டிருந்தாள் மதி

ஜெயா வந்து கதவை தட்ட, சசி தான் முதலில் கண் முழித்தான். மதி இன்னும் கண் முழிக்கவில்லை என்று கோவத்துடன் திரும்பினால், அங்கே அவள் குழந்தைப் போல் வாயில் விரல் வைத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

அவளை சற்று நேரம் பார்த்தவன், "அவளின் நிமிர் நடை, எந்த வேலை கொடுத்தாலும் கட்சிதமாய் முடிக்கும் சமார்த்தியம், மான் போல் துள்ளி வலம் வரும் மதியை இதுவரை பார்த்தவன்", குழந்தை போல் அழகாய் பக்கத்தில் பார்க்கும் போழுது மனதில் என்னவென்று சொல்ல தெரியாத ஒரு உணர்வு எழுந்தது. அது என்ன என்று யோசிக்க ஆரம்பித்த வேளையில், ஜெயா மறுபடியும் கதவை தட்டினார்.

அப்பொழுது மதியிடம் சலனம் தெரிய, திரும்பி படுத்துக் கொண்டான் சசி.

மதி நேரமாகியதை உணர்ந்து, பட்டென்று எழுந்து கதவை திறந்தாள்.

"சாரி மா தொந்தரவு பண்ணியதற்கு"

"இல்ல அத்தை, களைப்புல ரொம்ப நேரம் தூங்கிட்டேன்."

"பரவாயில்லை மா, குளிச்சுட்டு கிழ வா, நான் உங்களுக்கு காபி ரெடி செய்றேன்"

திரும்பி கதவை சாத்தியவள், "நல்ல வேளை இவன் எந்திரிக்கல" என்று அவன் புறம் நின்று அவனை ரசித்தாள்.

சசி ரொம்ப வெள்ளை இல்ல என்றாலும், கருப்பும் இல்லை. சராசரி எடை மற்றும் உயரம். ஜிம் போய் கட்டழகுடன் இருக்கும் 27 வயது இளைஞன். Software engineer ஆக பிரபல நிறுவனத்தில் பணி புரிகிறான்.

"எப்ப பார்த்தாலும், எப்படி பார்த்தாலும் அழகா தெரியறானே ஏன்????"

சசி அசையவும், பாத்ரும்க்கு ஓடி விட்டாள்

அரை மணி நேரத்தில், குளித்து உள்ளே துணி மாற்றி, கிழே சென்றாள்.

ஜெயா அவளுக்கு காபி கொடுத்து குடித்து முடித்ததும், சசிக்கு காபி கொடுக்க சொன்னாள்

"செத்தேன், சரி இதெல்லாம் நமக்கு சாதாரணம் மதி" என்று சொல்லிக் கொண்டே அவர்கள் ரும் சென்றாள்

அங்கே சசி குளித்து முடித்து, துண்டுடன் நிற்க, செய்வதறியாமல் சிலை போல் நின்றாள்

அவன் தான், அவனுடைய அமைதி சுபாவத்திற்கு தாவி?! "என்ன வேணும்?" என்று கேட்டான்

"காபி??"

"அங்க வெச்சுட்டு போ!"

காபியை வெய்த்துவிட்டு, விட்டால் போதும் என்று ஓடிவிட்டாள்

சசி குளித்து முடித்து கிழே வரவும், காலை சிற்றுண்டி ரெடி ஆகவும் அனைவரும் அமர்ந்து சாப்பிடும் போழுது,

"நான் திங்கள் கிழமை வேலைக்கு போகணும்" - சசி

"என்னது வேலைக்கு போகணுமா? பத்து நாள் கழிச்சு போகலாம். மறுவீடு வேற போகணும் சும்மா இரு" - குமரன்

"இல்ல பா, என்னக்கு லீவ் இல்ல, வேலை வேற நிறைய இருக்கு, மதி வேணும்னா வெச்சுக்கோங்க, நான் போகணும்."

"நான் மட்டும் இருந்து என்ன பண்ண போறேன"என்று யோசித்து, மதியும் "எனக்கும் வேலை இருக்கு மாமா. வேலை கொஞ்சம் முடிந்ததும் நாங்கள் நிறைய நாள் லீவ் எடுத்துட்டு வருகிறோம்"

"இல்ல மா, மறுவீடு?" என்று இழுத்த ஜெயாவை

"நான் அம்மாவிடம் சொல்லிக்கறேன் அத்தை" என்று சமாளித்தாள்.

"இப்போ நீங்க இரண்டு பேரும் தங்க வீடு என்ன பண்ணப்போறிங்க?" - குமரன்

"நான் எல்லாமே ரெடி பண்ணிட்டேன் அப்பா" - சசி

"பிடிக்கலனு சொல்லிட்டு, எல்லாம் ரெடி பண்ணிருக்க?" - குமரன்

சசி எதும் சொல்லாமல் செல்ல, மதி அமைதியாக சிரித்தாள்

இரண்டு நாட்கள் அமைதியாக செல்ல, சனிக்கிழமை இரவு அனைவரும் ரயிலில் ஏறினர்.

மதி மிடில் பெர்த் இல் படுக்க, சசி அவளுக்கு மேலே அப்பர் பெர்த் இல் படுக்க, எதிர்புறம் ஒரு இளைஞன், மேல் பெர்த் இல் இருந்து மதியை பார்த்துக் கொண்டிருந்தான்.

"நேற்று போல் குழந்தை மாதிரி அழகாக!? தூங்கி அதை இவன் பார்த்துக் கொண்டிருந்தால்?" என்று எண்ணி கிழே இறங்கி, அவளிடம் எதாவது வேணுமா என்று கேட்கலாம் என்று வந்தான்

அங்கே அவளோ, நெத்தி வரைக்கும் இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள்

சின்ன சிரிப்புடன் சென்று படுத்துக் கொண்டான்

அழகாய் ஞாயிறு காலை விடிந்தது!!!! ☺️

பட்டாம்பூச்சி சிறகுகள்Where stories live. Discover now