"எதற்காக இந்த கலக்கம் அம்மா வயசுல இருக்குறவ இல்ல அக்கா வயசுக்காரி என்ற சென்டிமன்ட்டா?"
முகேஷின் பக்கம் மவுனமே மிச்சம் "அவங்களும் தொழில் பன்றப்ப பொண்ணு வயசு தங்கச்சி வயசு புள்ளன்னு பார்க்காம தானே அவங்கள வெச்சி தொழில் பன்றாங்க அப்போ அவங்க தண்டிக்க பட வேண்டுமா வேண்டாமா?"
"வேண்டும் கண்டிப்பா அண்ணா"
"அப்பறம் கலக்கம் ஏன்?"
"சம்பவம் நடக்குறப்போ நான் போகாம இருக்கவா?"
"இல்ல எல்லாரும் போகனும்"
"ப்ளீஸ் அண்ணா"
"காரணம்?"
"பார்வதி என்னோட அம்மா அவங்க சீரழியிறத நான் எப்டி அண்ணா பார்ப்பேன்"
வரதாவின் கண்கள் விரிந்து ஆச்சர்யத்தின் உச்சகட்டத்திற்கு சென்றான்
"வாட் என்ன சொல்ற டா?"
"ஆமா அண்ணா எனக்கு இப்போ தான் இருபத்தி இரண்டு அப்பா எனக்கு பதிநான்கு வயசுலயே இறந்துட்டார் அம்மா எப்டி உழைச்சி சோறு போட்டான்னு தெரியாது ஸோ நான் சாப்டேன் அப்போலாம் எங்க வீட்ல நிறைய அக்காங்க இருப்பாங்க எல்லாம் போடிங்கா நிக்குறதா நினைச்சேன் அப்பறம் எனக்கு இருபது வயசு இருக்கும் போது தான் அம்மா தொழில் பன்றாங்கன்னூ தெரிஞ்சது நான் அம்மாவ எதிர்த்து சண்டை போட்டேன் அப்போ மதுரைல இருந்து என் சித்தியோட பொண்ணு கயலக்காவும் எக்கவுன்ட் படிச்சிட்டு சென்னைல வேகன்ஸி அதிகமா இருக்குன்னு வேலை தேடி சித்தி சித்தப்பவோட வந்தாங்க நான் அவங்க கிட்ட சொல்ல ட்ரை பன்னி முடியாம போச்சி வேலை கிடச்சதும் அம்மா எங்க வீட்ல நிக்க சொல்லி கேட்டதும் விட்டு போனாங்க கயலாக்கா ஹாஸ்டெல் போறதா தான் வந்தாங்க பட் அவங்க கெட்ட நேரம் எங்க வீடும் ஒரு ஹாஸ்டல் மாதிரி தான் அம்மா வெச்சி இருந்தாங்க. அவங்க வந்து மூன்று நாள் எந்த அநியாயமும் அவங்களுக்கு நடக்கலை நான் கொஞ்சம் சந்தோச பட்டேன் யேன்னா அக்காவ அம்மாவே சிதைக்கிறத கண்ணால பார்க்குற பார்க்கியம்லாம் யார்க்கும் வர கூடாத ஒன்னு இல்லையா நான்காம் நாளே அக்காவ ஒரு கிழவன் கண்டு கேட்டான் அம்மா அக்காக்கு களவுல "நைட் வா நான் அவள தர்றேன்"னு சொல்லி பெரிய எமௌன்ட்டா கேட்டாங்க அந்த கிழவன் சரி சொல்லிறுச்சி அதே போல அக்கா நாஷம் ஆயிட்டாங்க தாங்கிக்க முடியாம அம்மாவ போயி அடிச்சிட்டேன் அதுக்கு அம்மா என்ன சொன்னாங்க தெரியுமா "அவ உடம்பு நமக்கு சோறூ போடுதுன்றப்போ அந்த உடல விக்கிறது தப்பே இல்ல உனக்கு தேவைன்னா கூட அனுபவிச்சிக்க கயல் தான் இனி இங்க டொப்ன்னு அந்த மினிஸ்டர் சொல்டான் அவ்ளோ அழகும் கடவுள் அவளுக்கு கொடுத்து அவள இங்க கொடுத்தது எல்லாம் கடவுளோட விருப்பம் முகேஷ் போ கயல அனுபவி" ன்னு சொன்னாங்க என்னால தாங்கிக்க முடியாத வேதனை என்ன கொன்னா கூட அவ்ளோ வலிக்காதுன்னு நினைக்கிறேன் அவ்ளோ கவலை கஷ்டம் கயலக்காவ தேடிப்போன அவங்க வேலைக்கு போயிட்டாங்க உடனே வீட்ட விட்டு கோவிச்சிட்டு ரோட்ல இறங்கும் போது வழக்கம் போல கொலை அதற்கான காரணம் ரமணா அண்ணா சொன்னார் "அந்த ஆள் தன்னோட மருமகள அநியாயம் பன்னதால தான் கொல்றார்ன்னு" உடனே ரமணா அண்ணாவ பின் தொடர்ந்து போயி பேசினேன் இரண்டு நாள் எங்க கஸ்டடில நில்லு எங்க கூட இருக்கனுமா இல்லையான்னு சொல்றேன்னு சொன்னார் நானும் இருந்தேன் அப்பறம் வந்து சேர்த்து கிட்டார் உங்கள மீட் பன்ன ஆசை பட்டும் சான்ஸ் கிடைக்கல ஒரு நாள் நீங்க கார்ல ஏறும்போது மறஞ்சி நின்னு பார்த்தேன் எனக்கு எப்பவும் நீங்க தான் ரோல் மொடல் பட் என் ஹீரோவ நானே பார்க்கலைன்னா அது அநியாயம் இல்லையா அதான் அப்டி பார்த்தேன்"
YOU ARE READING
சந்திப்போமா (முடிவுற்றது)
General FictionBorn- 16-02-2019 Edit- 17-02-2019 Cover edit- Publishing- 01-03-2019 தவறுகள் செய்யாது தப்பான வழியில் வாழும் நல்லவர்கள் தான் நாயகனும் நாயகியும் விதி இருவரையும் தப்பான வழியில் வாழ வைத்து விட்டதை கொஞ்சமும் உணராத வெள்ளை உள்ளங்கள் இணையும் விதமே கதை...