அடுத்த நாள் காலை வரை அவள் வெளியே செல்லவுமில்லை வரதன் வந்தானா இல்லையா என்றும் திரும்பி பார்க்கவுமில்லை
இன்பத்தில் பிறந்து
இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிபவன்
யாருமில்லைதுன்பத்தில் பிறந்து
துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் மடிபவன்
யாருமில்லைஇன்பம் பாதி துன்பம் பாதி....
இரண்டும் வாழ்வின....என்று தனக்குள் முனுமுனுத்தாள்..
வரதன் அன்றே மாலைநேரம் வந்துவிட்டான் அனால் அடுத்த நாள் காலை வரை கயல் அவனுடன் பேச வரவே இல்லை
வரதனிற்கு அன்று காலை வரை உறக்கமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் சுமித்ரா இரவானதும் சென்று கதவை தட்டியதும் "அன்னி கொஞ்சம் மனசு சரியில்லை யார்ட்டயும் காமிச்சிக்க வேண்டாம் நான் தூங்குறேன் காலைல பார்ப்போம்" என்று விட
"சாப்டு கயல் யார்டயும் பேசலைன்னா பரவாயில்லை"
"இல்ல ரூம்ல ஸ்னக்கர்ஸ் இருக்கு அது போதும் வோட்டர் ஆல்ஸோ இருக்கு நீங்க கவலைபடாம தூங்குங்க"
கயல் முட்டாள்தனமாக முடிவு எடுக்கும் அளவு மெசுயூட் இல்லாதவள் கிடையாது அதனால் நிம்மதியாக இருக்கலாம் தான் ஆனாலும் மனசு சங்கடப்பட்டது சுமிக்கு அதற்கு மேலும் அவளுடன் ஆர்கியு செய்வதன் மூலம் டிஸ்டப்பா இருக்கும் என்று சென்று உறங்கி விட்டாள்
விடிந்ததும் எழுந்து ப்ரஷ் ஆகி காப்பி குடிக்க வந்தாள் அருகில் பேச வந்தான் வரதன் அவனை பார்க்க ஆசையாக இருந்த அவள் உள்உணர்வுக்கு கட்டுப்படுவதா தங்கைக்கு கொடுத்த வாக்கிற்கு கட்டுபடுவதா என்று புரியாது எழுந்து வேகமாக பெல்கனிக்கு சென்றாள்
வரதனின் கண்கள் கலங்கி விட்டதை ஒரு நொடிப்பொழுதில் கண்டு பிடித்த சுமி "அத்தை இப்பவே டைம் இல்ல பேசாம இன்னைக்கே பர்சஸ் பன்ன போலாமா?" என்று கேட்டாள்
YOU ARE READING
சந்திப்போமா (முடிவுற்றது)
General FictionBorn- 16-02-2019 Edit- 17-02-2019 Cover edit- Publishing- 01-03-2019 தவறுகள் செய்யாது தப்பான வழியில் வாழும் நல்லவர்கள் தான் நாயகனும் நாயகியும் விதி இருவரையும் தப்பான வழியில் வாழ வைத்து விட்டதை கொஞ்சமும் உணராத வெள்ளை உள்ளங்கள் இணையும் விதமே கதை...