வரதாவின் வேண்டுகோள்படி அடுத்த நாள் சன் நியுஸ் மற்றும் பல தொலைக்காட்சி,பத்திரைகள் மற்றும் வேறு ஊடகங்கள் என்று எங்கும்
பார்வதியின் புகைப்படத்தை வெளியிட்டு சென்னையில் பூந்தமல்லிப்பகுதியில் இரட்டை கொலை வழக்கில் சந்தேக நபராக அர்ரெஸ்ட் ஆகிய மாதவி என்ற பெண் மற்றும் பிரபல ரவுடி வரதாவும் இன்று தீர விசாரணையை தொடர்ந்து நிரபராதி என்று போலீஸ் கஸ்டெடியிலிருந்து விடுவிக்க பட்டனர்... இந்த விசாரணையின் முடிவில் புகைப்படத்தில் இருக்கும் பார்வதி என்ற பெண்ணே இந்த இரு கொலைகளையும் செய்ததாக சந்தேகிக்கும் வகையில் அவர் கொலை நடந்த நாளில் இருந்து இன்று வரை தலைமறைவாகி உள்ளார்..... இதனை தொடர்ந்து இந்த கொலை வழக்கு பற்றி கமிஷ்னர் நமக்கழித்த பேட்டி
"சார் இந்த இரண்டு கொலையையும் பார்வதி என்ற பெண் தான் செய்ததற்கான சாட்ச்சி இருக்கா?"
"வை நோட் பார்வதியோட மகன் முகேஷ் என்ற இளைஞன் பார்வதிய விட்டு இரண்டு வருடமாக பிரிஞ்சி இருக்குறாராம் அவர்க்கிட்ட எங்க டிம் விசாரிச்சதுல அங்க கத்தியால குத்தப்பட்டு கொலை செய்தவர் தான் தாத்தா என்றும் அவருக்கும் அம்மாவிற்கும் எப்பவும் வாய்த்தக்கம் என்றும் அம்மா அவர ஒரு தடவை அடித்ததால அவர் ஹாஸ்பிடல்ல எட்மிட் ஆகினதாகவூம் வாக்கு கொடுத்தார்
நாங்க அடுத்த ஹியரிங்ல அவர ஆஜர் பன்னுவோம்""இன்னொருத்தர் நீர்ல விஷம் கலந்து இறந்து இருக்காராமே அதையும் பார்வதி தான் பன்னினா என்றதற்கான காரணம்?"
"இருக்கு அந்த வயதான மனுஷனோட பி ஏ என்ன சொல்றார்ன்னா பார்வதிக்கும் அவருக்கும் ஐந்தாறு வருட தொடர்புன்னும் அவர் எப்பவும் அதிகமான வேலை டென்ஷன் நேரங்கள்ள பார்வதி வீட்டுக்கு தான் போவார்ன்னும் சொல்லி இருக்கார்..... அதை ப்ரூப் பன்ற மாதிரி பார்வதியின் மகன் முகேஷும் அந்த ஆள் எப்பவும் எங்க வீட்டுக்கு வருவார் நான் பல தடவை கண்டு கேட்டு இருக்கேன் அப்போலாம் எங்கம்மா என்கிட்ட அங்கிள்ன்னு சொல்லி பழக விடுவா எனக்கு பருவ வயசு வரும் வரை நானும் அத ஏற்றுக்கிட்டேன் பட் எனக்கு புரிய ஆரம்பிச்சப்போ அம்மா கிட்ட கேட்டப்போ வந்த வாக்குவாதத்துல தான் நான் வெளிய வந்தேன்... என்றும் சொன்னார் இதை எல்லாம் உண்மை படுத்தும் விதம் அந்த பார்வதியின் பக்கத்து வீட்டு பெண்ணும் "ஆமா இவர நான் பலமுறை பார்த்த இருக்கேன்" என்று சொன்னாங்க...."
KAMU SEDANG MEMBACA
சந்திப்போமா (முடிவுற்றது)
Fiksi UmumBorn- 16-02-2019 Edit- 17-02-2019 Cover edit- Publishing- 01-03-2019 தவறுகள் செய்யாது தப்பான வழியில் வாழும் நல்லவர்கள் தான் நாயகனும் நாயகியும் விதி இருவரையும் தப்பான வழியில் வாழ வைத்து விட்டதை கொஞ்சமும் உணராத வெள்ளை உள்ளங்கள் இணையும் விதமே கதை...