சந்திப்போமா..?-12

1.4K 85 27
                                    

எப்படியோ மதுரையை சென்று அடைந்ததும்  அவளின் வீட்டு தெருமுனையில் நிறுத்தி

"கயல் நீ இங்க கொஞ்சம் இறங்கிக்க தனியா போயிடு நான் அறைமணி நேரம் பின்னாடியே வார்றேன்"

"சரி" என்று மறு கேள்வி கேட்காது வீட்டுக்கு சென்றாள் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த அண்ணா குணா அவளை கண்டதும் எழுந்து  வீட்டுக்குள் சென்று விட்டான்

அவளும் அவனுடன் பேச நினைக்கவில்லை காரணம் இரண்டு வருடத்தின் பின் முதன்முதலில் வீட்டுக்கு வருகிறாள் வாழ்க்கையில் நடக்க கூடாதது எல்லாம் நடந்தும் முடிந்தாயிற்று எப்படி அவள் கேஷ்வலாக இருப்பாள்

சுமித்ரா தான் குணாவின் முக மாற்றத்தை கண்டதும் கயல் வந்துவிட்டாள் என்று கெஸ் செய்து ஓடி வந்தாள்

"அய் கயல் இப்போ தான் வர்றியா?" என்ற கூவலுடன் ஓடி வந்து கட்டி அணைத்தாள்  கயல் பழைய மாதிரி கலகலவென்று இல்லாது அமைதியாக இருப்பதை கவனித்தவள்

"கயல் உங்க அண்ணா பற்றி தெரியும்ல அவர நினைச்சி நீ அப்ஸட் ஆகாத நாங்க எல்லாம் உன் பக்கம் தான்"என்றாள் கன்னத்தை கிள்ளி

"தேங்ஸ் அன்னி  ஆமா அம்மா அப்பா எங்க?"

"அம்மா கிச்சன்ல நீ வந்தது தெரியாது உனக்காக பிரியாணி பன்றாங்க அப்பா துங்குறார்   கொஞ்சம் டயர்ட்டா வந்து தூங்குறேன்  கயல் வந்தா எழுப்பி விடுன்னு சொன்னார்"

அம்மாவை பார்க்க கிச்சன் சென்றதும் ஓடி வந்து ஜானகி கட்டி கொண்டாள்

"சுமி அப்பாவ எழுப்பி விடுடா இல்லேன்னா கோசிப்பார்"

"இல்லன்னி வேண்டாம் அப்பாவ நானே போயி பார்க்குறேன்"

"அம்மா எப்டி மா இருக்க இளா(இளநகை யை சுருக்கி இளா என்று அழைக்கிறாள் கயல்) எங்௧ம்மா.....?"

"ஏதோ டியூஷன்னு சொல்லிட்டு போனா வர்ற டைம் தான் கன்னு?"

"ஹம் சரிம்மா....நீ சமை நான் ப்ரஷ்ஷாகிட்டு வர்றேன்" என்று கூறி விட்டு மேல் மாடியில் உள்ள தன் அறைக்கு செல்ல போனவளை  தடுத்து

சந்திப்போமா (முடிவுற்றது)Where stories live. Discover now