பாடசாலையின் இடைவேளையின் போது மலர் அபிக்கு பேச்சுக்கொடுத்தாள். பின் சிறு நேரம் கலந்துரையாடலின் விளைவு இருவரும் நல்ல நண்பர்களானர்.கை கழுவி விட்டு சாப்பிட ஆரம்பித்த போது தினேஷ் வகுப்பில் நுழைந்தான். அவளது சாப்பாடு பொதியை பறித்து எடுத்து குப்பையில் போட்டு விட்டு தன் பாட்டில் சென்றவனை பார்க்க, கண்ணீர் திரை இட்டது.
மலர் அவளை சமாதானம் செய்து, அவள் கொண்டு வந்த உணவை சாப்பிட்ட வைத்தாள். ஆனால் அவன் ஏன் என்னை இப்படி பண்றான் என்று விடை தெரியாத புதிராக இருந்தது.
பாடசாலை விட்டு சென்றாலும் நடந்த கசப்பான சம்பவம் கண் முன்னே வந்து சென்றது. ஏனெனில் அன்றே புதிய பாடசாலைக்கு சென்ற முதல் நாளாயிற்றே. ஆனால் குடும்ப அரவணைப்பில் நாளும் முடிந்தது.
காலை எழுந்து பாடசாலைக்கு தயாராகும் போது இனங் தெரியாத பயம் தொற்றிக் கொண்டது. வகுப்புக்குள் நுழைந்த அபி அவளது எதிரியை தேடினாள். ஆனால் அவன் வந்திருக்கவில்லை. சந்தோசத்துடன் இருக்கையில் அமர,
" என்ன சோடாமூடி, என்ன விஷயம்? என்ன தேடினதா என் நண்பர் சொன்னாரு, உண்மையா?" என்று அவளை விழுங்க போவது போல் கேட்டான் தினேஷ்.இவனது குரலை கேட்ட அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது. "நோ ஐ நின்ட் சேர்ஸ் யூ" என்று பயந்த குரலில் அபி கூற,
"என்னடி, நானும் பார்த்துட்டே இருக்கேன். ஓவரா இங்கிலீஷ் பேசுற? குடும்பம் ரோயல் பெமலி போல, தமிழே தெரியாத மாறி பிகேவ் பண்ற, இது இங்கிலீஷ் மீடிய ஸ்கூல் என்று எனக்கும் தெரியும். ஆனால் சுத்த தமிழ்ழ எங்களோடு பேசு. புரிதா?? இது முதலும் கடைசியுமாக இருக்கட்டும்.", "சரி" என்று தலை அசைக்கவும், ஆசிரியர் வருகையும் வர சரியானது.
அபிக்கு தினேஷின் தொந்தரவு தொடர்ந்து நடைபெற்றாலும் மலரின் நட்பால் அது மறக்கப்படிக்கப்பட்டது. இவ்வாறு நாட்கள் நகர, அபிக்கு தினேஷின் தொந்தரவும் பழகியும் போனது.
என்ன நடந்தாலும் கல்வி நடவடிக்கையில் அவதானமாக இருந்தாள் அபி. அவளது திறமையால் ஆசிரியர் மத்தியிலும் நல்ல மதிப்பை பெற்றாள்.
அவ்வளவு காலம் மோனிட்டர் பதவியை செய்த அகிலனுக்கு சுகவீனம் ஏற்படவே அபிக்கு அப் பதவி கொடுக்கப்பட்டது. அது தினேஷிற்கு பெரும் சங்கடமாகியது. ஒரு பெண்ணின் தலைமைக்கு நான் கட்டுப்படுவதா? என மனம் கூற, நண்பர்களும் ஒவ்வொன்று கூறி அவனை வெறுப்பேற்ற, எரிகின்ற நெருப்பில் எண்ணெயை விட்டனர். நீ செய்தவைக்கு பழி வாங்குவாள் என்றும் கூறலானர்கள்.
இடைவேளையின் போது ஒரு முடிவை எடுத்து கொண்டு அபியின் அருகே சென்று அமர்ந்தான் தினேஷ்."என்ன மேடம், ரொம்ப ஹெப்பியில் துள்றீங்க போல. உனக்கு அகிலன் பற்றி என்ன தெரியும்? அவன் என்ன மாதிரி தான். ஆனால் என்னை விட கெட்டவன். அவனின் பதவி பறிப்பது என்று அவனுக்குத் தெரிந்தால் உன்னோடு எப்படி நடந்து கொள்வானோ தெரியவில்லை. என் சார்பாக உனக்கு ஓர் எச்சரிக்கை செய்ய தான் இங்கு வந்தேன். உனக்கு இந்த பதவியை அவனுக்கு விட்டுக்கொடுப்பது நல்லதென்று எனக்கு தோன்றுகிறது. இவ்வளவு சொல்லிட்டேன். இதற்கு மேல் உன் இஷ்டம் " என்று கூறி பதில் ஏதும் கேட்காமலே சென்று விட்டான் தினேஷ்.
என்ன இவனுக்கு என் மேல் திடீர் பாசம். தப்பாச்சே. அதுபோகட்டும். அகிலன் பற்றி கூறியதெல்லாம் உண்மையா இருக்குமா என்று தெரியவில்லையே. மலரும் இன்று வரவில்லையே கேட்டு தெரிந்து கொள்வதற்காவது. ஏன் எனக்கு இவ்வளவு சோதனை? என்று தன்னுள்ளே புலம்பி கொண்டாள் அபி.
பாடசாலையை விட்டு போகும் வழியெல்லாம் ஒரே யோசனையாய் இருந்தாலும் தங்கையின் அலப்பறைகளில் மறக்கலானாள்.அன்று காலையும் அழகாய் மலர, காலை கடன்களை முடித்து கொண்டு, பாடசாலைக்கு தயாராகி, பேருந்தில் பயத்துடன் பயணம் செய்து கொண்டிருந்தாள் அபி. ஆனால் அடுத்த பஸ் தரிப்பிடத்தில் இருந்த நபரை கண்டு அவளது இதயமே நின்று போனது.
தொடரும்...
YOU ARE READING
அது இதுவோ??(completed)
Romanceஒருவரை ஒருவர் உண்மையாக காதலித்தும், குடும்ப சூழ்நிலையும், விதியும் சேர்ந்து விளையாட இருவரும் எப்படி சேர்வார்கள் ? என்று பொறுத்திருந்து பார்ப்போம். கதா நாயகன் தினேஷ். கதா நாயகி அபி. #1 rank in காதல் 20.05.2019 #1 rank in காதல் 05.05.2019 epi 38 #1 ra...