அது இதுவோ?? 💞episode 11💞

3.3K 108 0
                                    


அபி "ஓவர் ஆக தான் போறாரு. ஸ்பெஷல்லா வேண்டுமாம். அதில் நஞ்சையும் போட்டு கொடுத்தால் சரி. ஆளும் மண்டையும். என்னதான் நான் தப்பு பண்ணேன் என்று என்னோடு மட்டும் மோதுகிறாரோ" என்று முணுமுணுத்து கொண்டே கடைக்கு சென்று வாங்கி கொண்டு வந்தாள்.

வகுப்பிற்குள் சென்று அமர்ந்து இருந்த அனைவருக்கும் பகிர, தினேஷின் இடத்துக்கு வந்து கோபத்துடன் அவனது கையில் அவன் கேட்ட ஐஸ் கீரீமை கொடுத்து விட்டு சென்ற அவளை கண் வாங்காது பார்த்து கொண்டிருந்தான் தினேஷ்.

எல்லாரும் சாப்பிட்டு விட்டு வீடு செல்ல, "என்னடி, நீ கொண்டு வந்து தந்த ஐஸ் கிரீம் இவ்வளவு கசப்பாக இருக்கிறது" என்று கூறி, அரைவாசி மட்டுமே சாப்பிட்ட  ஐஸ் கீரிமை தூக்கி குப்பையில் போட்டான். அபிக்கு கண் கலங்கி போய்விட்டது.
இப்படியும் மனசாட்சி இல்லாத மிருகமா? என்று அவனை நினைத்தபடியே வீடு சென்றாள்.

காலம் உருண்டோட,
சாதாரண தரப் பரீட்சையும் அருகில் வந்தது. ப்ரொஜக்ட் ஒன்று செய்ய வேண்டும் என்பதற்காக மட்பாண்டம் செய்யும் இடத்துக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
எல்லாரும் அத் தினத்தை எதிர்பார்த்த வண்ணம் இருந்தனர். விரைவில் அந் நாளும் வந்தது.

இந்த ப்ரொஜக்டுக்கு குழுக்கள் பிரிக்கப்பட்டது. இரு பெண்களும் 4 ஆண்களும் கொண்ட குழு. அதிலே விஷேடம் நம்ம ஹீரோவும் ஹீரோயினும் ஒரே குழு உறுப்பினர்கள்.

தினேஷிற்கோ மிக சந்தோசம். அபியுடன் இதை சாக்காக வைத்து நக்கலடித்து கிண்டலாக என்று.

இருவரும் ஒரே பேருந்து. மகிழ்ச்சியாகவும் குதூகலமாகவும் பயணம் தொடர்ந்தது. பாடல்களுடன் இனிமையானது.
பாடல் வரிகள் தினேஷை கனவுலகில் சஞ்சரிக்க வைத்தது.

தினேஷ் ரோசா பூவோடு அபிக்கு பின்னால் நின்று தனது காதலை சொல்ல, அவள் மெய் சிலிர்க்க....
என்று கட்டி கொண்டு இருந்த தினேஷின் கோட்டையை உடைத்தான் அவனது உற்ற நண்பன்.

விஞ்ஞான ஆசிரியர் என்றாலே அவ் வகுப்பிற்கே பிடிக்காது. அவருடைய கட்டளைகளும் ஒரு கட்டத்தில் வெறுப்பை காட்டினாலும் தினேஷின் நகைச்சுவை நக்கல்களில் மறந்து போயின. அதை கேட்டு கொல்லென்று அபி சிரிக்க, அவளது சிரிப்பில் தன்னையே மறந்தான் தினேஷ்.
அவளுக்கும் அவனது நகைச்சுவையும் காலப்போக்கில் பிடித்து போனது என்று அன்று அவன் அறிந்தான்.

ஆனால் அபிக்கு அவனின் கரெக்டர் மாத்திரம் விளங்கிக் கொள்ள முடியாத புதிராக காணப்பட்டது.

வர வேண்டிய இடத்துக்கும் வந்து சேர, மட்பாண்ட தொழில், செய்முறை, அவற்றால் ஏற்படும் நஷ்டம், வருமானம், அத் தொழிலை செய்வதில் உள்ள குறை நிறைகள் என்பவற்றை தினேஷின் கட்டளைப்படி அபியே குறித்து கொண்டாள்.

அவர்களது சிறிய சுற்றுலாவும் ஆற்றங்கரை, கடைகள் என்று அழகிய இடங்களால் எழில் சூழ்ந்தன.

ப்ராஜெக்ட் இற்கு ஒரு வாரமே கால வரையறை தரப்பட்டது.

"நீ என்ன செய்வியோ? செய்ய மாட்டியோ என்று எனக்கு தெரியாது. நீ தான் நம்முடைய team தலைவர். ஆகவே ப்ரொஜக்டை ஒழுங்காக செய்து வர வேண்டும், எனக்கு நல்ல மார்க்ஸ் வந்தால் போதும். எல்லாம் ஒழுங்காக குறித்து வைத்தாய் தானே" என்று கூற,
"ஐயோ நான் என் தந்தையின் ஊருக்கு அவசரமாக போக வேண்டும். ஆனால் ப்ரொஜக்ட் டெட்லைனுக்கு முதல் நாள் வந்து விடுவேன். ஆனால் எனக்கு தனியாக செய்ய முடியாது" என்று அவள் முணங்க,

" அதெல்லாம் எனக்கு தெரியாது. எப்படியாவது கூகுளில் தேடு. தேவையென்றால் இந்த தொலைபேசி இலக்கத்தை நோர்ட் பண்ணிக்கோ" என்று அவனது தொலைபேசி இலக்கத்தை எழுதி கொடுத்துவிட்டு,
தன் பாட்டுக்கு போகும் அவனை கண்டு அபிக்கு கோபமும் ஆத்திரமும் தலைக்கேறியது.

"எனக்கு கட்டளை தர வந்துவிட்டாரே. பெரிய திமிர் பிடித்தவன்" என்றபடி வாய்க்கு வந்ததெல்லாம் ஏசி கொண்டு நடையை கட்டினாள் அபி.

தொடரும்...

அது இதுவோ??(completed) Where stories live. Discover now