அது இதுவோ?? 💞Episode 21💞

2.7K 92 6
                                    


காலை வீட்டு கூக்குரலில் எழுந்த அபிக்கு நேற்று நடந்ததது ஒரு கனவாக இருக்க வேண்டும் என்று மனம் வேண்டிக் கொண்டு கையடக்கத் தொலைபேசியை தேட, அவளது தங்கையும் அவ்விடம் வந்து சேர்ந்தாள். "என்ன அக்கா, காலையில் எழுந்தததும் எழும்பாமலும் எதையோ தேடுகிறாய்???"
"என் ஃபோனை கண்டாயா???"
"இல்லை அக்கா"
கொஞ்சம் தேடி தா தங்கையே. இன்று வாணி college வருவாளா? இல்லையா? என்று மெசேஜை பண்ணி இருப்பாள் அதுதான் தேடுகிறேன்" என்று பொய் காரணம் சொன்னாள் அபி.

ஒருவாறு சிறு தேடலின் பின் ஃபோன் உம் கிடைக்கப்பெற, இன்பொக்சில்  உள்ள மெசேஜை ஓபன் செய்ய அவனது நேற்று அனுப்பியது நனவே என்ற நினைத்த அவளுக்கு காலையே இருண்டு போனது. வாணியிடம் சரி சொல்லி மனதை தேற்றிக் கொள்வோம் என்று காலேஜை நோக்கி தயாராகினாள். வாணிக்கு கோல் செய்து அவளது வரவை உறுதிப்படுத்தியும் கொண்டாள்.

அம்மா தந்த டீயை ருசிக்காது மடமடவென குடித்து விட்டு செல்ல,
"அபி, என்ன நடந்தது உனக்கு?? சாப்பாட்டையும் மறந்துவிட்டு போகிறாய்??"
"ஒன்றுமில்லை மா... தலை இடிக்குது அதுதான்.."
"அப்போ. இன்றைக்கு லீவ் போட்டு விட்டு வீட்டிலே இரு " என்று தாய் கரிசனையுடன் சொல்ல,
"இல்லம்மா.. இன்றைக்கு கட்டாயம் போக வேண்டும். எக்ஸாமும் வருகிறது மா. எனக்காக வாணியும் வந்திருப்பாள்" என்றாலும்
அவளது மனதோ" இன்றைக்கு வீட்டில் இருந்தால் பைத்தியம் தான் எனக்கு பிடித்துவிடும். நான்கு சுவருக்குள்ளே இருக்க முடியாது. இந்த ஃபோனை கண்டாலே தினுவை தான் நினைவுக்கு வருகிறது. அவன் பேசியது, அவன் மெசேஜ் செய்தது எல்லாமே. சோ இட்ஸ் பெட்டர் டு கோ டு காலேஜ் " என்று அவளது மனம் கூறலாயிற்று.

காலேஜிற்கு சென்று அவளால் விரிவுரைகளை கவனிக்கமுடியாமல் மனம் ஒருநிலையில் இல்லாமல் போனது. சகபாடிகளின் நகைச்சுவை ஏனோ அன்று எரிச்சலை ஊட்டியது. சிறு சிறு சீண்டலுக்கும் வழமைக்கு மாறாக எல்லோரிடமும் கோபப்பட்டாள். இடைவெளியின் போது உணவோ அவளது தொண்டைக்குழியால் ஏனோ இறங்க மறுத்தது. உணவையும் குப்பையில் வீசி விட்டு ஒரு மூலையில் உட்கார்ந்து யோசித்து கொண்டிருக்க, அவளது தோளை யாரோ பற்ற, திரும்பி பார்த்தாள் அபி.

"என்னடி, உன் பிரச்சினை? நானும் வந்ததில் இருந்து பார்த்து கொண்டே இருக்கிறேன். ஏதோ தொலைத்துவிட்டு வந்ததது போல் இருக்கிறாய்??" என்ற அவளின் பாச வார்த்தைகளை கேட்டு, எழும்பி அவளை கட்டியணைத்துக் கொண்டாள் வாணியை அபி.

"யாருமே இவ்வளவு காலம் பழகியும் தன்னை இவ்வளவு புரிந்து கொள்ளவில்லை ஆனால் நீ... மோனீங் வரும்போதே உன்னிடம் சொல்ல வேண்டும் என்று வந்தேன். ஆனால் சொல்ல மனது விடவில்லை. என்னோடு மட்டும் எல்லாம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என் மனதில் இருக்கின்ற கவலை எல்லாம் யாரிடம் சரி சொன்னால் தான் ரிலேஃப்பாகி ஆகி விடுவேன். இதுவரை எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள இருந்த ஆள் என் கூட இப்போது இல்லையே" என்று விம்மி விம்மி கூற,

" தெளிவாக சொல்லுடி. என்ன உலறுகிறாய் ??"என்று அவளை அமர்த்தி கேட்க,
அவளது காதல் கதைய முதலிருந்து இறுதிவரை சொல்லி முடித்தாள் அபி.

" என்னடி, இவ்வளவு நடந்தும் ஒன்றையும் என்னிடம் சொல்லவே இல்லை " என்று சினம் கொண்டாலும், அவளுக்கு இப்போது இருப்பது நான் மட்டுமே என்று சினத்தை ஓரம் கட்டி அவளுக்கு ஆறுதல் கூறலானாள்.

" நீ ஒன்றும் யோசிக்காதே. உன்னை அவன் உண்மையாக லவ் பண்ணினால் உன்னை தேடி வருவான் டி. உன்னை உண்மையாக நேசிக்கிறவன் உன்னை இப்படி அழ வைத்து சந்தோச படமாட்டான். நீ அவனை உண்மையாக லவ் பண்றாய் என்று விளங்குதுடி. நீ ஒன்றும் யோசிக்காதே. எல்லாம் சரி ஆகும்." என்று அவளது ஆறுதல்கள் அப்போது அவளது காயத்துக்கு மருந்து போட்டாலும் அது எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்று அப் பேதையான அபி அறியவில்லை.

தொடரும்...

அது இதுவோ??(completed) Donde viven las historias. Descúbrelo ahora