அது இதுவோ?? 💞episode 3💞

4.9K 144 5
                                    


வகுப்பிற்குள் சென்று அமரும் வரை அந் நபர் அவள் பின்னாலே வந்தார்.

"ஹாய் குட் மோனீங் அகிலன்" என்று காலை வணக்கம் கூறி, சுகம் விசாரித்தனர் வகுப்பு மாணவர்கள். ஆனால் அபி மட்டும் ஒதுங்கியே போனாள். அகிலன் ஒதுங்கி நின்ற அபியை பார்க்க, அபியோ அவனது கோபப் பார்வை தன்னை துளைக்கிறது என எண்ணி தரையில் பார்வையை செலுத்தினாள்.

சிறுது நேரத்தில் ஆசிரியர் வர, கூட்டமும் கலைந்தது. அருகில் அமர்ந்த மலர் "ஆ யூ ஓகே அபி? ஏன் அகிலனோட பேச வரல்ல? வெகு நாளுக்கு பிறகு வந்திருக்கிறானே? இடைவேளையில் போய் பேசு. சரியா? " என கூற, ஆம் என்று தலையை ஆட்டிவிட்டு, நண்பிக்கு நேற்று நடந்ததை பிறகு சொல்வோம் என்று பாடத்தை கவனிக்கலானாள் அபி.

" மோனிட்டர் கம் ப்ளீஸ்" என்று வகுப்பாசிரியர் அழைக்க, அகிலன் எழுந்து முன்னே செல்ல, அவனை தினேஷ் நிறுத்தி , "டேய், இப்போது அபி தான் வகுப்பு தலைவர் " என்று ஏளனமாக சிரிக்க, அகிலனுக்கு ஒரு மாதிரியாய் விட்டது.

தூரத்தில் இருந்து எல்லாவற்றையும் நோக்கியபடி அசையாத கால்களை கஷ்டப்பட்டு அசைத்த படி அபி வந்து, ஆசிரியர் கூறிய ஏவல்களை செய்ய, "லீடிங் திஸ் கிளாஸ் இஸ் நொட் மச் ஈசி அபி, தெயர் ஆர் சம் ஸ்பெஷல் ரெஸ்போன்சிபல் ஃபோ மோனிட்டர். அகிலன் டிட் ஹிஸ் ஜோப் வெரி வெல் பட் ஹிஸ் எப்சென்ஸ் மேட் மீ டூ சேன்ஞ் தெ மொனிட்டர். சோ டோக் வித் அகிலன் லேட்டர் அன்ட் லேன் ஹொவ் டு பிகம் அ குட் மொனிட்டர் " என்று ஆசிரியர் கூற, அபியின் மனதோ பயத்தால் ஊசலாடியது.

இடைவேளையின் போது, மாணவர்கள் வெளியேற, அகிலன் மட்டும் மைதானம் செல்லாமல் நின்றான் ஏனெனில் டாக்டர் தூசியில் இருக்க கூடாது என்று அவனை பணித்துள்ளார் என்பதால்.
என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று அகிலன் இருக்கும் இடத்திற்கு சென்றாள் அபி.

"அகிலன், உங்களுக்கு எப்படி இப்போது?" என்று பயமிக்க குரலுடன் கேட்டாலும், தினேஷை போல் என்னை கடித்து குதறுவானோ? அந்த தினேஷையே இப்போது சமாளிக்கிறோம். இவனையும் அதே போல் சமாளிப்போம் என்று மனம் கூறலாயிற்று.

"ஏதோ இருக்கிறேன் அபி . தூசி, குளிர் சாப்பாடெல்லாம் சாப்பிடக் கூடாது என்று டாக்டர் கூறிய நிபந்தனைகளை வரிசைப்படுத்தினான். இன்னும் அகிலன் மொனிட்டர் ஜொப்பின் கடமைகளையும் அழகாய் கூறலானான். அபிக்கோ தினேஷ் கூறியதெல்லாம் பொய் என்று புலப்பட, சிறு நேரமே தேவைப்பட்டது. ஆனால் அவன் ஏன் அவ்வாறு சொன்னான் என்று தான் விளங்கவில்லை.

அபியோ தன்னை வித்தியாசமாக பார்க்க, "அபி, என்ன இப்படி பார்க்கிறாய்? நான் ஏதும் தப்பா சொல்லிவிட்டேனா ?" என்று அகிலன் கேட்க, தனக்கே குட்டு ஒன்றை குட்டியவள், "அய்யோ அப்படி ஒன்றும் இல்லை அகிலன். ஆனால்.. " என்று தயங்கிய படி இழுத்தாள். "என்ன அபி? ஆனால்..? " என்று,
"நான் மோனிட்டர் ஆகியது உனக்கு ஹட்டாக இருக்கின்றதா? உன்னை டீச்சர் புறக்கணித்த மாதிரி பீல் பண்ணுகிறாயா? போய்ஸ் ஒவ்வொன்று சொன்னப்போது கெல்டியா? இருந்ததா? சோ சாரி அகிலன்" என்று அபி கூற, மறு புறம் சிரிப்பொலியே கேட்டது.

"நீ லூசாடி ?? ஐயோ இதெல்லாம் ஒரு விஷயமா? ஆசிரியர் உன்னை தலைவராக போட்டது சரியான தெரிவு. எனக்கு அடிக்கடி சுகயீனம் வருவதால் ஸ்கூல் வர முடியவில்லை, நான் வராத நாளெல்லாம் யாரு கிளாஸ்ஸ லீட் பண்றது? நானே ஆசிரியரிடம் என் பதவியை கொடுக்க தான் இருந்தேன். ஆனால் அதற்கு முன் ஆசிரியரே மாற்றிவிட்டார். ஒரு பெண்ணாக லீட் பண்ண கஷ்டம் என்றெல்லாம் நினைக்காதே. யூ கென் டூ இட் அபி. இப்படி செய் என்று சில அறிவுரைகளையும் கூற, "இப் யூ நீட் எனி ஹெல்ப், ஐ வில் பீ தெயர் அபி. ஆல் த பெஸ்ட். " என்று கூறி அகிலன் கையை நீட்ட,
நடப்பதெல்லாம் கனவா நனவா? அகிலன் என்றவனை எப்படி எல்லாம் நினைத்து இருந்தேனே என்று மனதுக்குள் திட்டி கொண்டாள்.

" எவ்வளவு நேரம் தான். நானும் கை நீட்டி கொண்டிருக்க, " என்று அவன் பொய் கோபப்பட," ஐயோ சாரி" என்று கையை நீட்டி கைக் குலுக்கினாள் அபி.

அந் நேரம் பார்த்து தினேஷ் வகுப்பில் நுழைய, இருவரின் கை குழுக்கல் அவனுக்குள் பூகம்பம் எழ செய்தது.

தொடரும்...

அது இதுவோ??(completed) Where stories live. Discover now