அது இதுவோ?? 💞Episode 30💞

2.7K 84 2
                                    


அன்று மலரின் பிறந்தநாள். மலரின் பேர்த்டே பார்ட்டிக்கு அபியும் பாடசாலை சகபாடிகளும் செல்ல ஏற்பாடு செய்தனர்.

அபியின் வீட்டில் முன்புபோல் எங்கும் செல்ல அவளை அனுமதிப்பதில்லை.
"இதுதான் அம்மா, கடைசி தடவை." என்று வெகு நேர கெஞ்சல் பின் அனுமதியை பெற்றாள். ஏன் திடீரென இவ்வளவு கட்டுப்பாடு என்று அவளால் அப்போது ஊகிக்க முடியவில்லை.

அபியின் பாடசாலை சகபாடி வரும்போது தினேஷை காண, "இன்னைக்கு, மலரின் பிறந்தநாள். பார்ட்டிக்கு போகிறோம், வாடா.." என்ற கூற,
அவனும் தலையசைத்து தனது பாடசாலை நண்பர்களுக்கு ஃபோன் செய்து அவர்களையும் அழைத்திருந்தார் மலரின் வீட்டுக்கு வந்தான்.

மலரின் வீட்டுக்கு வந்த சகபாடி, தினேஷ் இன் வருகையை தெரியப்படுத்த, அவனது வருகையை சற்றும் எதிர்ப்பார்க்காத அபி மகிழ்ச்சி அடைந்தாள். தினேஷை பார்க்கின்ற கடைசி நாள் இன்றாக இருக்கலாம். ஆகவே தினேஷிடம் என் மனதில் உள்ள காதலை சொல்ல வேண்டும். பல சம்பவங்கள் எமக்கிடையில் நடைபெற்றமையால் ஓர் வேலை அவனின் மனதும் மாறி இருக்கலாமே. அதற்கு முதலில் அவன் மனதில் என்னே பற்றி என்ன எண்ணம் இருக்கிறது என்று தெரிய வேண்டும் என்றபடி குளிர்பானத்தை எடுத்து கொண்டு தினேஷை நோக்கி சென்றாள்.

"ஹாய் டா.." என்ற அபி கூற,

"ஹாய் டி. என்ன கதை?? நீ இங்கே? " என்று கேட்க,

"உன் உயிர் நண்பியின் பேர்த்டே எல்லாம் உனக்கு நினைவு இருக்கிறதே. அதுதான் சர்ப்ரைஸ் பண்ண அவளை தேடி வந்து விட்டாய் போல"
"ஏன் நான் வரக்கூடாதோ" என்று வேணுமென்றே வம்புக்கு தினேஷை இழுக்க,

"லூசாடி, எனக்கு யாருடைய பேத்டே உம் நினைவு இல்லை, என் பேத்டே கூட நீ விஷ் பண்ணவும் தான் எனக்கே நினைவு வரும். பேத்டே எல்லாம் நாம் பொன்னுகள் மாதிரி கணக்கு எடுப்பதில்லை " என்று தினேஷ் கூறினான்.

" ம்ம்ம்.. இனி உன் சுசி, அதாவது உயிர் நண்பி என்ன சொல்கிறாள்..?" அபி ஈகோ உடன் கேட்க,
"இருக்கிறாள். அவளுக்கென்ன..?"
"நானும் பார்த்து கொண்டே இருக்கிறேன். எல்லோரையும் உயிர் நண்பி, உயிர் நண்பி என்று சொல்லுகிறாய்? அவர்கள் எல்லோரும் என்னுடைய வெறும் நண்பர்கள் தான். விளங்குகிறதா ?? " என்று சொல்ல,

அது இதுவோ??(completed) Where stories live. Discover now