அது இதுவோ?? 💞Episode 25💞

2.7K 84 8
                                    


அபியிடமிருந்து பதில் எதுவும் வராமலிருக்கவே,
"நம்புடி. என்னால் உன் படிப்பு வீணாக கூடாதென்று தான் மெசேஜ் பண்ணவில்லை. உன்னை வேண்டும் என்று நான் எவொய்ட் பண்ணவில்லை " என்ற மெசேஜின் பின்,

"சரி தினேஷ். நான் நீ சொல்வதை நம்புகிறேன். ஆனால் அதற்கு முன்னால் என் மனதிற்கு பட்ட சில கேள்விகளை உன்னிடம் கேட்கவேண்டும். நீ ஃரீயா ஆக தானே இருக்கிறாய்??" என்று அபி கேட்க,

"நீ எதை பற்றி கேட்க போகிறாய் என்று தெரியும். அபி, நீ எத கேட்க போறன்னு எனக்கு நல்லாவே தெரியும். தயவு செய்து அந்த தலைப்ப எடுக்காதே. உன் மனதில் இருப்பதை இல்லாமல் செய்து என்னோடு பேச பாரு. அப்படியே மறக்க முடியாது என்று என்னோடு தொடர்பு கொள்வதை விடு.

என்னுடைய லைஃபில் இல் கிடைத்திருக்கிற நல்ல பெஸ்ட் ப்ரெண்ட் நீ தான். நான் வழி தவறும்போது நீ தான் எனக்கு நேர்வழி காட்டியிருக்கிறாய். உன்ன மாதிரி ஒருத்திய என் வாழ்க்கைல கிடைத்தது பெரிய கிஃப்ட் தான். ஆனா ஒரு நல்ல நண்பியாக மட்டும். நன்றாக யோசித்து முடிவு எடு. என்னை ப்ரெண்டை ஆக மட்டும் பார்க்க பாரு. உன் வாழ் நாள் கடைசி வரை நல்ல நண்பனாக நான் இருப்பேன். இல்லாவிட்டால் உன் லைஃபில் இல் இருந்து நானே போய்விடுவேன்"
என்ற தினேஷின் பதிலில் துடிதுடித்து போனாள் அபி.

அவருக்கு நான் ப்ரெண்டாக மட்டும் இருக்க வேண்டும். லவ் உம் பண்ணவும் கூடாது. அவர்தானே ரவ் பண்ணுவோமா அப்படி இப்படி என்று தேவையல்லாத எண்ணத்தை என் மனதில் போட்டார். இது வரை எனக்கு அவர் சொல்லும்வரை அவர் மேல் அப்படி ஒரு எண்ணமும் தோன்றவில்லையே. இப்போது  இவருக்கு  என்ன பிரச்சனை??

நண்பனாக இருக்கும் ஒருவனை அளவுக்கதிகம் நேசித்து காதலனாக எண்ணமுடியும்.
ஆனால் காதலனாக நேசித்த ஒருவனை பழகப் பழக அவன்மேல் காதல் கூடுமே தவிர குறையாதே. நண்பனாக அவனை நினைக்க முடியாதே.
என்று அபிக்கு அக் கணம் புரியவில்லை.

தானே பிழை என்று அத் தவறை தன் மேல் திணித்து கொண்டு தினேஷை நண்பனாக மட்டும் பார்க்க முடிவு செய்தாள் அபி.

பெண் என்பவள் தனக்கு பிடித்தமானதை ஒரு போதும் விட்டு கொடுக்காமல் தன்னையே மாற்றும் இயல்பு கொண்டவள் அல்லவா??

சில கட்டத்தில் மனதை கல்லாக மாற்றி  கொண்ட சந்தர்ப்பங்களும் அமைந்தன. சில வேளைகளில் தினேஷை அளவுக்கதிகம் கெயார் பண்ணாமல் பட்டும் படாமல் இருந்தாள்.

நாட்கள் விரைவாக ஓட,
"அபி, என் நோட் கம்பிலீட் இல்லை, கொஞ்சம் உன் புத்தகத்தை தர முடியுமா ?" என்று தினேஷ் கேட்க,
"ஒரு கிழமையில் படித்துவிட்டு தருகிறேன்" என கூற,
400பக்க புத்தகம் ஒன்று வாங்கி அவ்வளவு நோர்ட்டையும் ஒரு கிழமையில் தெளிவாக அழகாக பல வர்ண பேனாக்களை பயன்படுத்தி மிக்க காதலுடன் எழுதி முடித்தாள் அபி. க்ளாஸ் வந்தபோது தினேஷின் புத்தகப்பையில் போட்டுவிட்டு மெசேஜ் ஒன்று அனுப்பி வைத்தாள்.

"உனக்கு ஏன் தேவையற்ற வேலை அபி? " என்று தினேஷ் கேட்க,
"என் நண்பனுக்காக இதை கூட செய்ய மாட்டேனா?" என்று தனது காதலை மறைத்து நட்பு என்ற வகையில் செய்ததாக நம்ப வைத்தாள் அபி.

தனக்கு ஏதோ ப்ராஜெக்ட் வேண்டும் கூற, எல்லோரிடமும் கேட்டு பார்க்க, எல்லோரும் கையை விரித்தனர். கல்லூரியில் சேர்ந்ததற்கே சீனியர் களுடன் பேச்சு கொடுக்காத அபி தினேஷூக்காக அவர்களிடம் போய் ப்ராஜெக்ட்டை வாங்க சென்று வசமாக மாட்டி கொண்டாள்.
சிறு பகிடிவதைக்கும் ஆளாகி, ப்ராஜெக்ட்டை ஐ கொண்டு வந்து தினேஷ் இடம் ஒப்படைத்தாள்.

தினேஷின் மீது உயிரையே வைத்து, அவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் தன்னை அவன் ஒரு நாள் ஏற்பான் என்று அவளது மனம் சொல்லலாயிற்று.

அவ்வேளை,
"நிழலாக உந்தன் பின்னால்
நடமாடுறேன்
நிஜமாக உந்தன் முன்னால்
தடுமாருறென்
ஒரு செல்ல நாயாய்
உந்தன் முன்னே வாலாட்டுரேன்
உன் செயலை எல்லாம் தூரம் நின்று
பாராட்டுறேன்
என்னை ஒரு முறை
நீயும் திரும்பி பார்ப்பாய
கண்ணை கட்டிக் கொண்டு உன் பின்னால்
காலம் முழுவதும் வருவேனே
உந்தன் பாதையில் பயம் இல்லை
நீ வா
மலையை சுமக்கிற பலம் உனக்கு
மலரை ரசிக்கிற மனம் உனக்கு
இனிமேல் எப்போதும் நீ எனக்கு
நீ வா
உன் துணை தேடி நான் வந்தேன்
துரத்தாதே டா.... "
அவளின் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப வானொலியில் இப்பாடல் ஒலிக்க தன்னையே மறந்தபடி கேட்டு கொண்டிருந்தாள் அபி.

தொடரும்..

அது இதுவோ??(completed) Tempat cerita menjadi hidup. Temukan sekarang