மங்கிய இருள் அடர அடர
அடைபட்ட நினைவுகள்,வெளியிடும் ஓலங்கள்
மீண்டும் ஒரு தூங்கா இரவு!பகலில் மறையும் விண்மீன் போல
தற்காலிகமாக, மறையும் சோகங்கள்..
விடியல் வெளிச்சத்தில் ஒரு நம்பிக்கை!முகப்பரு கண்டும் அழுபவர் உண்டு..
தாயிழந்தும் போலிச் சிரிப்பவர் உண்டு..
இங்கே, விதவிதமாய் வாழ்க்கைகள்!இரவு காணா நாட்கள் இல்லை..
நிரந்தர இன்பம் என்றும் இல்லை..
சில மனிதர்கள், இரவில் அழும் விண்மீன்கள்!- விதவிதமாய் வாழ்க்கைகள் !
YOU ARE READING
விதவிதமாய் வாழ்க்கைகள் !
Poetryஅந்நொடி தோன்றல்கள் பேசலாம்.. அர்த்தமற்ற கனவுகள் பேசலாம்.. அழகுக் காதல் பேசலாம்.. அழுத இரவுகள் பேசலாம்.. உறுத்தும் இரகசியங்கள் பேசலாம்.. மறந்த மனிதர்கள் பேசலாம்.. மனிதம் பேசலாம், வாழ்க்கை பேசலாம்.. அத்தனையும் பேசலாம்.. மௌனங்களின் வார்த்தைகளாய்.. இக்க...