குழலோடு விளையாடி
குழந்தையாய் சுருண்டு படுத்து
மிருதுவான இருக்கத்தில்
இளம் சூடு கண்டு
மடி மீது துயில்வேன்..
பேரமைதியோடு !இருள் வானம் எங்கும்
அடர் வண்ணங்கள் தீட்டி
அலங்கார நிலாக்கள்
விதவிதமாய் விண்மீன்கள்
இன்பக் கனா காண்பேன்..
உன்னோடு !துயில் உலகம் எங்கும்
குளிர்க் காற்று கடற்கரை
கரையோர மரம் ஒன்றில்
மலர்த் தோரண ஊஞ்சல்
அலையோடு விளையாடி அசைந்தாடுவாய்..
என்னோடு!விடியும் முன்பு
உன் முகம் கண்டு,
நான் விழிக்கும் முன்பு
இத்துயிலில் மரணம் அழைத்தாலும்
உனை முத்தமிட்டுச் செல்வேன் ..
மகிழ்வோடு !- ர வாசுகி
YOU ARE READING
விதவிதமாய் வாழ்க்கைகள் !
Poetryஅந்நொடி தோன்றல்கள் பேசலாம்.. அர்த்தமற்ற கனவுகள் பேசலாம்.. அழகுக் காதல் பேசலாம்.. அழுத இரவுகள் பேசலாம்.. உறுத்தும் இரகசியங்கள் பேசலாம்.. மறந்த மனிதர்கள் பேசலாம்.. மனிதம் பேசலாம், வாழ்க்கை பேசலாம்.. அத்தனையும் பேசலாம்.. மௌனங்களின் வார்த்தைகளாய்.. இக்க...