வெல்லக் கரைசலில்
வெண் பனி படலம்
இவள் கண்ணங்களின் சுருக்கமோ
கண்ணீரின் தடம்...ஏந்தும் கைகளுக்கு பதில் என்றுமே
குறைவில்லை இறைவன் சந்நிதானத்தில்...ஆனால்...
அவளின் கண்ணீர் துளிகளோ
கரைந்து கரை தேடி போனது
தான் மீதம்...
எவ்வித பயனும் இல்லைதாமரையாய்
அவள் கண்ணம் சிவக்க
தாரகையாய் மின்னிக் கொண்டிருந்தாள்...
அவளின் வானில் மட்டும்...பிஞ்சு கண்ணமோ
பித்தாய் போய் விட்டது...
பாவம் இவள் வாழ்க்கையோ
பிடுங்கி எறியப்பட்டது...வாலிபனே சற்று வா நீ
உன்னுள் கேட்டுப் பார்
உண்மை உரைக்கும்..ஏழைத் தாய் மகள் வாழ்விற்கு
வழி செய்...வரதட்சணையை...
மனம் கொண்டு உடைத்தெறி...வாலிபனே சற்று நிதானி...
சிந்தனையின் பின்னணியில்
ரப்பிடமே உன் பிடி...
மஹ்சரில் மாட்டிடாமல்..
அவளை...அவளை மட்டும்
ஏற்றுக்கொள்...!!!