சட்டியில் சோறு இல்லை...
அலங்கரிக்க ஆடை இல்லை...
வாசல் வெளி செல்ல கையில் காசு இல்லை...
உடல் நோகாமல் உறக்கம் இல்லை...
தூரம் செல்லாமல் படிப்பு இல்லை...இல்லை என்ற சொல் இருக்கும் இடத்தில் துளி நிம்மதிக்கு கூட பஞ்சம் இல்லை... ஆனால்...
இல்லை என்ற எண்ணமே இல்லாத வர்க்கம் நிம்மதியை தேடி திரிகிறது...
ஏழையின் குடிலும்...பணத்தின் வயிறும்
என்றுமே ஒன்றாகாது..