காதல் தோல்வி என்று
கடல் மாதா கண்ணீர்
துடைத்து விடுகிறாள்...
கரு நீல வானின்...இவளின் விசும்பல் கேட்டு
கதிரவன் ஒளிந்து கொள்ள
தனிமை தீயில்...
சாம்பலானாள்...இவளுக்கு...
அசைவின்றி அலைந்து
திரியும் விண்மீன் கூட
ஆறுதல் தர
இடம் தரவில்லை...அனிச்சம் பூவிதழ்
அக்கினி நிலவோ
அனாதையாய் போன வானினை
அன்னார்ந்தும்
பார்த்திடவில்லை...பாவம்... வானோ
கடலே கதி என
கண்ணீர் சிந்துகிறாள்...இன்று கருவானை
ஆசுவாசப் படுத்த
கடல் மாதாவை தவிர
வேறு யாரும் வரவில்லை...எனினும்,
பேதையவள் அறியவில்லை
போலும்...
கரு நீல வானின் கண்ணீரின்
சொந்தகாரி தான் தான்
என்று...இது ஆறுதலோ! இன்றேல்...
ஆற்றாமையோ!