பார் கண்ட பாரதி...

24 11 11
                                    

எண்ணூற்று என்பத்திரெண்டில்
எண்ணியறியா ஏட்டிசை தர
எங்ஙனம் எட்டிய பச்சை தமிழன்
      பாரதிக்கு...

பலரும் போற்றும் பாவை வேண்டி
பல் சுவை கவி  தந்த
எம் பாரதி நீ பார் பார்த்திட்ட
நாளின்று...

நீ கேட்டிட்ட பூவுலகு இன்னும்
கையளவும் அடையவில்லை என்று
அறியாமலே சென்றுவிட்டாய்

எனினும்...

நீ போற்றிய தமிழ் இன்றும்
தேனமுதாய் தித்திக்கும் என்று நீ
அறியாமலே சென்றுவிட்டாய்

நீ விட்ட இடத்தில் நாம்
தொட்டு தொடங்கினோம்  எம்
இளையவரும் தொடங்குவார்....

பாவை உலகு,தமிழுலகு
இன்னும் வேண்டி
உன் போல் பாரதிகள்
இன்றும் உன்
பிறப்பிலே பிறப்பிடம்
எடுக்க வேண்டி
வாழ்த்துகிறேன்....

நீ  நீங்கினாலும்  நீங்காது
உன் தமிழ்... எம் தமிழ்...

இவ் வரிகள் பாரதியின் பிறப்பிற்காய்
பிறந்தவை...
ஆனாலும் தவிர்க்க முடியாத காரணங்களால் பிறந்த தினத்தில் பதிவு செய்யாமைக்கு
வருந்துகிறேன்...
உங்கள் கருத்துகளுக்கு காத்திருக்கும் இவள்...


வரம்பின் வார்த்தைகள்Where stories live. Discover now