வைகறை புலம்பலில்
வெதும்பிடும் பட்சிகள்
சிலிர்த்திடும் காற்றில்
விரித்த சிறகை
உதைத்து விளையாடுகிறது
விண்ணில்....ஆரவாரமிகு ஆராதனை
அணைந்திடுவதாக
இல்லை இவர்கள்
வீட்டில்...மாமியார் ஒருபுறம் புலம்ப
மருமகளின் சினம்
கூரை அறுக்கிறது...கணவன் இவன்
கண்ணதாசனின் வரிகளில்
வாயை மூடுடி
என...
அடுப்பங்கறை கரண்டியோ
வரவேற்பரையை
வீரிட்டு பார்க்கிறது...குழந்தையின் குரலில் ஒளிந்து கொண்ட பாட்டனின் கனவுக் கன்னியோ..
மீண்டும் வர மறுக்க
காலியாய் போனது
காலைப்பசி...குழப்படி பண்ணும் மருமகளின் சினம்
ஒருபுறம்...
குழம்பித் திரியும் பத்தினி
ஒருபுறம்...
குழப்பிடும் மகன்
ஒருபுறம்...குடும்பத்தடன் கும்மி அடித்து
கொள்கிறோமே
என வெட்கித்து நிற்கும் மாமனார்
ஒருபுறம்...விடியும் ஒவ்வொரு பொழுதும்
விஷமமாய் அமைய
காரணம்
கணவனோ மனைவியோ
மாமனாரோ மாமியாரோ
இல்லை..
இவ் உறவுகளுடன் கொண்ட புரிதலின்
பற்றாக்குறையே...