ஆடு நீரோடை பளபளவென
காடு கரையின்றி தண்டியடிக்க
வாடை காமன் நேரம் குறித்து
தாடை தொட்டிட நசைஇற்றான்ஆகாய ஆலாக்கள் தாளம் போட்டிட
ஆலங்குருவிகள் கீச் கீச் இட
வெறுங்கால் வையோனோ
வெக்க கதிர் தனை மறைத்திட்டான்ஆழமற்ற ஆரோக்கிய தென்றலில்
ஆடிடும் வெண் மலர் தனை
ஆசையுடன் உரசி உரசி
ஆவணம் தீர்த்துக் கொண்டான்செண்பக சீண்டல் தனை
நீண்ட வால் கொண்டு நீட்டி
செவ்வந்தியின் செவ்வாசத்துடன்
சிவ்வென்று தேற்ற வைத்தான்பாவம் காமன்...
இத்தனையும் செய்து காட்டி
மத்தென்றும் மசியவில்லை
கங்கை அவள் துளி நீருக்கு
தங்கமென்ற வி்லையோ???
அப்புச்சேனை